பாடல் #3304
பாலர் நேசனே
🔤 Paalar Naesanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலர் நேசனே - மிகப்பரிவு கூர்ந்திந்த பாலரை யேந்தி - ஆசீர்வதியும் யேசுவே. 1. பாலர் வந்திடத்தடை பண்ணொனா தென்றீர் சால வந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர். - பாலர் 2. வான ராஜ்யம் இவர் வசத்த தென்றீரே பிரதிஷ்டையால் உந்தன் நாமஞ் சூட்டுவீர். - பாலர் 3. கானம் பாடியே பாலர் கர்த்தரே யுமைத் தானே ஓசன்னா! எனச் சத்தமிட்டாரே. - பாலர் 4. தேவ பாலனே நீரும் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உம்மை வேண்டினோமையா. - பாலர் 5. ஆவியால் இவர் ஞான அபிஷேகம் பெற ஜீவ நேசரே அருள் சிறுவர்க் கீவீரே. - பாலர் 6. தாசர் நாங்கள் செய் வாக்குத்தத்தம் மீறாமல் நேச யேசுவே எமை நிலை நிறுத்துவீர். - பாலர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalar Naesanae - Migapparivu Koornthindha Paalarai Yaenthi - Aaseervathiyum Yaesuvae. 1. Paalar Vanthidatthatai Pannonaa Thenreer Saala Vandharul Thanthu Thalaimaer Kaivaippeer. - Paalar 2. Vaana Raajyam Ivar Vasattha Thenreerae Pirathishtaiyaal Undhan Naamanj Soottuveer. - Paalar 3. Kaanam Paatiyae Paalar Karttharae Yumaith Thaanae Osannaa! Enach Satthamittaarae. - Paalar 4. Thaeva Paalanae Neerum Siriya Pillaiyaay Maevinee Rathaal Ummai Vaentinomaiyaa. - Paalar 5. Aaviyaal Ivar Njaana Apishaegam Pera Jeeva Naesarae Arul Siruvark Keeveerae. - Paalar 6. Thaasar Naanggal Sey Vaakkutthattham Meeraamal Naesa Yaesuvae Emai Nilai Nirutthuveer. - Paalar