பாடல் #3303
பாலர் ஞாயிறிது
🔤 Paalar Njaayirithu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும். தாலந்தைப் புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் - பாலர் 1.பாலர் சங்கத் தாலே மாட்சிமை பெற்றோம், பாலர் நேசர் பாதம் பணியகற்றோம், பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம், ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். - பாலர் 2.தேடி வந்தலையும் தேசிகருண்டு, பாடி ஆர்ப்பரிக்கப் பாலர் பாட்டுண்டு, கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு, நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. - பாலர் 3.இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே, இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே, அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்துவரும் எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு. - பாலர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalar Njaayirithu, Paasamaay Vaarum, Paati Yaesu Naamam Paninthu Porrum. Thaalanthaip Puthaitthitaamal Thaamathamae Pannitaamal Njaalameethirangki Vandha Suvaami Yaesu Anpai Ennip - Paalar 1.paalar Sanggath Thaalae Maatsimai Perrom, Paalar Naesar Paadham Paniyakarrom, Paaril Jothi Veesukindra Parisuttha Vaedham Karrom, Ooril Engkum Nam Panjsaanggam Othum Paaliyar Naesan Kantom. - Paalar 2.thaeti Vandhalaiyum Thaesigaruntu, Paati Aarpparikkap Paalar Paattuntu, Kooti Vanthu Aananthikkak Koottappantikaiyumuntu, Naati Meetpar Paadham Paalar Thaeda Ellaa Aethumuntu. - Paalar 3.inru Mattum Nammai Aenthi Vanthaarae, Innum Nitthiyamum Paathukaappaarae, Anpin Sanggam Ithaikkontu Aathma Naesar Seythuvarum Enni Mutiyaa Nanmaiyai Aegamaaga Ennikkontu. - Paalar