பாடல் #3301
பாலரே ஓர் நேசர் உண்டு
🔤 Paalarae Or Naesar Untu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாலரே! ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும் இவ்வன்பர் திவ்ய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே! ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக யேசு அங்கரசாள்வாரே ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சி தானுண்டோ? 3. பாலரே! ஓர் க்ரீடம் உண்டு விண் மோட்ச வீட்டில் நீர் நல் மீட்பரின் பேரன்பால் பொற் க்ரீடம் அணிவீர் இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின் சென்றார் இவ்வாடா ஜீவ க்ரீடம் அப்போது சூடுவார். 4. பாலரே! ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை நீர் அவரிடம் வாரும் ரூடவ்வார் அவ்வின்பத்தை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paalarae! Or Naesar Untu Vin Motsa Veettilae Neengkaa Innaesar Anpu Or Naalum Kunraathae Urraarin Naesam Yaavum Naal Sella Maarinum Ivvanbar Thivya Naesam Maaraamal Nilaikkum. 2. Paalarae! Or Veetu Untu Vin Motsa Naattilae Paer Vaazhvuntaaga Yaesu Anggarasaalvaarae Oppartra Andha Veettai Naam Naada Vaentaamo? Angkullor Inba Vaazhvil Or Thaazhchsi Thaanunto? 3. Paalarae! Or Kreedam Untu Vin Motsa Veettil Neer Nal Meetparin Paeranpaal Por Kreedam Aniveer Ippothu Meetpaip Perru Maa Naesar Pin Senraar Ivvaataa Jeeva Kreedam Appothu Sootuvaar. 4. Paalarae! Or Keedham Untu Vin Motsa Veettilae Maa Jeya Keedham Paada Or Veenaiyum Untae Annaattin Inbam Ellaam Nam Meetparkkurimai Neer Avaridam Vaarum Roodavvaar Avvinbatthai.