பாடல் #3300
பாலரே நடந்து
🔤 Paalarae Natanthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலரே, நடந்து வாருங்கள், காலையில் எழுந்து கூடுங்கள், சாலவே சீவன் சுகமும் தந்த தேவனை, மைந்தன் யேசுவைச் சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள். சிறு கண்கள் இரண்டு தந்தனர் தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே! சிறு செவி இரண்டு தந்தனர் தேவன் சொல்லைக் கேட்பதற்குமே; சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள். - பாலரே சிறிய கால் இரண்டு தந்தனர் செல்லவே மோட்சப் பாதையில்; சிறு கைகள் இரண்டு தந்தனர் செய்யவே தேவ ஊழியம்; சீக்கிரம் அந்தப் பாதை சென்று மெய்த் தேவனைத் தினம் சேவித் தேத்துங்கள். - பாலரே நாவும் ஓர் மிடறுந் தந்தனர் நன்மையைப் பேசிப் பாடவே மா விளம் இதயந் தந்தனர் வால வயதில் அவரை நினைக்க ஆதலால் நமதுடல் இதயமும் அவருக்காலயமாய்ப் படைப்போமே. தூதர்க்ள அனந்தம் பேர் முனி மாதவர் அநேக மாயிரம் சுத்தர்கள் நரரும் யாவரும் பக்தியாய் வணங்கிப் போற்றும் ஓர் துய்ய தேவனை திவ்ய நாதனை மெய் மனதுடன் ஸ்தோத்திரியுங்கள்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalarae, Natanthu Vaarunggal, Kaalaiyil Ezhunthu Kootunggal, Saalavae Seevan Sugamum Thandha Devanai, Maindhan Yaesuvaich Santhoshatthudan Porrip Paatunggal. Siru Kankal Irantu Thandhanar Devan Seythavai Nokkip Paarkkavae! Siru Sevi Irantu Thandhanar Devan Sollaik Kaetpatharkumae; Sirappudan Avar Pathatthai Nokkiyae Thivya Vaartthaiyaik Kaettu Vaarunggal. - Paalarae Siriya Kaal Irantu Thandhanar Sellavae Motsap Paathaiyil; Siru Kaigal Irantu Thandhanar Seyyavae Thaeva Oozhiyam; Seekkiram Andhap Paathai Senru Meyth Devanaith Thinam Saevith Thaetthunggal. - Paalarae Naavum Or Midarun Thandhanar Nanmaiyaip Paesip Paadavae Maa Vilam Idhayan Thandhanar Vaala Vayathil Avarai Ninaikka Aadhalaal Namathudal Idhayamum Avarukkaalayamaayp Pataippomae. Thoodharkla Anandham Paer Muni Maadhavar Anaega Maayiram Suttharkal Nararum Yaavarum Pakthiyaay Vanangkip Porrum Or Thuyya Devanai Thivya Naadhanai Mey Manathudan Sthotthiriyunggal.