பாடல் #32926
தேவனை பாடி துதிப்போம்
🔤 Devanai Paati Thuthippom
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனை பாடி துதிப்போம் இயேசுவை போற்றி புகழ்வோம் (2) தூய ஆவியானவரை வாழ்த்தியே பாடிடுவோம் (2) ஓசையுள்ள கைத்தாளத்தோடும் வீணை தம்புரு நாதத்தோடும் (2) பாடுவோம் திரியேக தேவனையே உயர்த்துவோம் அவரின் நாமத்தையே (2) - தேவனை துதிகளின் மத்தியில் வசிப்பவரை துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய்(2) ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே-நாம் ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே (2) - தேவனை மீட்கப்பட்ட என் ஆத்துமாவே மீட்பரையே போற்றி பாடுவாயே(2) மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே மீட்பரின் மனம் மகிழட்டுமே(2) - தேவனை பூரிகை எக்காளம் முழங்கிடுவோம் உன்னத தேவனை போற்றிடுவோம்(2) அல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம் ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம் (2) - தேவனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanai Paati Thuthippom Yesuvai Porri Pugazhvom (2) Thooya Aaviyaanavarai Vaazhtthiyae Paatituvom (2) Osaiyulla Kaitthaalatthotum Veenai Thampuru Naadhatthotum (2) Paatuvom Thiriyaega Devanaiyae Uyartthuvom Avarin Naamatthaiyae (2) - Devanai Thuthigalin Matthiyil Vasippavarai Thuthitthituvom Jeyakempeeramaay(2) Sthotthira Paligalai Selutthiyae-naam Sthottharippom Nam Devanaiyae (2) - Devanai Meetkappatta En Aatthumaavae Meetparaiyae Porri Paatuvaayae(2) Meetpin Jeyathoni Thonikkattumae Meetparin Manam Makizhattumae(2) - Devanai Poorikai Ekkaalam Muzhangkituvom Unnatha Devanai Porrituvom(2) Allaelooyaa Paatiyae Aarpparippom Aandavarin Naamatthai Thozhuthituvom (2) - Devanai