பாடல் #3292
பாரும் பாரும்
🔤 Paarum Paarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரும், பாரும், ஐயா, - எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா, - திருக்கண்கொண்டு. பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா; ஜீவனே; ஓசனா! - பாரும் 1.பாவநாசர் பிணையே, - பரி பூரண மேவும் உயர் துணையே, - வினையை எய்யும் தேவ திருக் கணையே, - உலகில் உள்ள - யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியில் சேயனே! - பாரும் 2.ஞாலந்தனில் இருளை - அகற்றிமிகச் - சீலந்தரும் அருளே, - அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே, - மனுடர்களின் - கோலம் உறும் பொருளே, காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்; காரண நேசனே, ஆரண வாசனே, பூரண ராசனே, தாரணி, ஈசனே. - பாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarum, Paarum, Aiyaa, - Enai Anpaagap Paarum, Paarum, Aiyaa, - Thirukkankontu. Paaril Makizh Vellaip Pathi Maeviya Paraa, Paava Vimosanaa, Theevinai Naasanaa, Moo Vulakaasanaa; Jeevanae; Osanaa! - Paarum 1.paavanaasar Pinaiyae, - Pari Poorana Maevum Uyar Thunaiyae, - Vinaiyai Eyyum Thaeva Thiruk Kanaiyae, - Ulakil Ulla - Yaavar Unakkinaiyae! Poovil Ivvaantemaip Punidhaneriyil Kaavum, Podhaka Naayanae, Maadhava Thooyanae, Kodharum Aayanae; Aathiyil Saeyanae! - Paarum 2.njaalandhanil Irulai - Agarrimigach - Seelandharum Arulae, - Atiyarkatkanu Koolam Niraitherulae, - Manudarkalin - Kolam Urum Porulae, Kaalatthai Enna Meyk Karutthai Enakkaliyum; Kaarana Naesanae, Aarana Vaasanae, Poorana Raasanae, Thaarani, Eesanae. - Paarum