பாடல் #32909
உம்மை சார்ந்து நிற்கிறேன்
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
Scale: G Maj
Beat: 4/4
உம்மை சார்ந்து நிற்கிறேன் நான் தோற்றுபோவதில்லை உம்கிருபையில் வாழ்கிறேன் நான் வெட்கப்படுவதில்லை (2) நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உந்தனின் நல்ல கிருபை வழுவாமல் என்னை காப்பதும் உந்தனின் வல்ல கிருபை (2) - உம்மை நிற்கிறேன் என்று எண்ணுவதில்லை ஆகையால் நான் வீழ்வதில்லை என்னால் என்று எண்ணவில்லை மேட்டிமை நான் கொள்வதில்லை (2) - உம்மை அடைந்தேன் என்று நினைப்பதில்லை ஆசையாய் நான் தொடருவேன் பிடித்துக்கொண்டேன் என்பதில்லை இலக்கை நோக்கியே நானும் செல்வேன் (2) - உம்மை தாழ்ந்திருக்கவும் கற்றுக்கொண்டேன் ஆகையால் நான் சோர்ந்திடேன் எந்தனின் எல்லா நிலைமையிலும் மனரம்மியமாக நானிருப்பேன் (2) - உம்மை