பாடல் #32903
உம் சேவைக்காய்
🔤 Um Saevaikkaay
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: C Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 86 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே (2) பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே (2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லை ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை (2) இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன் பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன் (2) இருமனம் நான் என்றும் கொள்வதில்லை இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை (2) ஒருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன் என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Saevaikkaay Ennai Arppanikkinraen Aerrukkollumae Ennai Aerrukkollumae (2) Paliyaaga Ennai Pataitthaen Aerrukkollum Yesuvae (2) Paakaalai Muttham Naan Seyvathillai Orupothum Avanmunpaay Panivathillai (2) Ichsaigal Maamisatthai Verutthituvaen Parisuttharae Ummai Pin Thodarvaen (2) Irumanam Naan Enrum Kolvathillai Irantu Ejamaankal Enakku Illai (2) Orumanathotu Enrum Ummai Saevippaen En Aayul Muzhuvathum Neer Mattumae (2)