பாடல் #32872
கானா ஊரிலே
🔤 Kaanaa Oorilae
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 167 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானா ஊரிலே இயேசு திருமண வீட்டிலே முதல் அற்புதம் செய்தாரே தண்ணீர் ரசமாய் மாறிற்றே (2) இருமனம் ஒன்றாய் இணையும் நேரம் இணைக்கும் கர்த்தர் மகிழும் நேரம்(2) முப்பிரிநூல் அறாதே-நம் இயேசுவில் இணைந்தால் அறாதே (2) மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல நல்லதல்ல ஏற்ற துணையை உண்டாக்கினார் (2) இதுமுதல் தகப்பன் தாயை பிரிந்து இருவரும் ஒன்றாய் இணையச் செய்தார் குடும்பம் உருவானதே மகிழ்ச்சி நிறைவானதே (2) - கானா சபை கர்த்தருக்கு கீழ்படியும் கீழ்படியும் அதுபோல புத்தியுள்ள மனைவி இருப்பாள் (2) அன்பு கூர்ந்து ஜீவன் கொடுத்தார் கணவரை அவர்போல் காணச்சொன்னார் போஷித்து காப்பாற்று நீ நேசித்து காத்திடு (2) - கானா தேவன் இணைத்ததால் ஒருபோதும் பிரியாதீர் பிரியாதீர் தேவகோபம் உன்மேல் வருமே(2) வாழ்விலும் தாழ்விலும் எல்லாநிலையிலும் ஜெபித்து ஒன்றாய் வாழ்ந்திடுவீர் விவாகம் கனமுள்ளதே பரிசுத்தம் பிழையற்றதே (2) - கானா வாழ்த்துகிறோம் (2) நீடூழி வாழ வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் (2) பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaa Oorilae Yesu Thirumana Veettilae Mudhal Arpudham Seythaarae Thanneer Rasamaay Maarirrae (2) Irumanam Onraay Inaiyum Naeram Inaikkum Kartthar Makizhum Naeram(2) Muppirinool Araathae-nam Yesuvil Inainthaal Araathae (2) Manushan Thanimaiyaayiruppathu Nallathalla Nallathalla Aertra Thunaiyai Untaakkinaar (2) Ithumudhal Thakappan Thaayai Pirinthu Iruvarum Onraay Inaiyach Seythaar Kutumbam Uruvaanathae Makizhchsi Niraivaanathae (2) - Kaanaa Sapai Karttharukku Keezhpatiyum Keezhpatiyum Athupola Putthiyulla Manaivi Iruppaal (2) Anpu Koornthu Jeevan Kotutthaar Kanavarai Avarpol Kaanachsonnaar Poshitthu Kaappaarru Nee Naesitthu Kaatthitu (2) - Kaanaa Devan Inaitthathaal Orupothum Piriyaatheer Piriyaatheer Thaevakobam Unmael Varumae(2) Vaazhvilum Thaazhvilum Ellaanilaiyilum Jepitthu Onraay Vaazhnthituveer Vivaagam Kanamullathae Parisuttham Pizhaiyartrathae (2) - Kaanaa Vaazhtthukirom (2) Neetoozhi Vaazha Vaazhtthukirom Vaazhtthukirom (2) Pallaantu Vaazha Vaazhtthukirom Yesuvin Naamatthil Vaazhtthukirom