பாடல் #32855
பரம குயவனே என்னை
🔤 Parama Kuyavanae Ennai
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: E Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 143 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம குயவனே என்னை வனையுமே உம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமே களிமண்ணான என்னை வனைந்திடுமே (2) உம்கரத்தாலே மண்ணை பிசைந்து மனிதனை உருவாக்கினீர் (2) எந்தனையும் தொட்டு -உம் சாயலாக வனையும் உம்மைப்போல மாற்றிடுமே -என்னை (2) - பரம குயவனே உமக்குகந்ததாய் உடைத்து என்னை உம்முடைமை ஆக்கிடுமே(2) விருப்பம்போல என்னை திருத்தும் உந்தன் கரத்தால் அருமையாக வனைந்திடுமே - உமக்கு (2) - பரம குயவனே உமது சித்தத்தின் மையத்திலென்னை வைத்து என்றும் வழிநடத்திடும் (2) உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன் முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை(2) - பரம குயவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Kuyavanae Ennai Vanaiyumae Um Sittham Pol Ennai Vanaiyumae (2) Umakkaaga Ennai Vanaiyumae Kalimannaana Ennai Vanainthitumae (2) Umkaratthaalae Mannai Pisainthu Manidhanai Uruvaakkineer (2) Endhanaiyum Thottu -um Saayalaaga Vanaiyum Ummaippola Maarritumae -ennai (2) - Parama Kuyavanae Umakkugandhathaay Utaitthu Ennai Ummutaimai Aakkitumae(2) Viruppampola Ennai Thirutthum Undhan Karatthaal Arumaiyaaga Vanainthitumae - Umakku (2) - Parama Kuyavanae Umathu Sitthatthin Maiyatthilennai Vaitthu Enrum Vazhinatatthitum (2) Undhan Sittham Seyya Ennai Thattham Seythaen Muzhumaiyaaga Arppanam Seythaen-ennai(2) - Parama Kuyavanae