பாடல் #32846
சிலுவையை சுமந்து
🔤 Siluvaiyai Sumanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சிலுவையை சுமந்து அம்மை பின் செல்லவே இயேசுவே என்னை அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்து மே நல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கிறேன் உந்தன் திருப்பாதத்தில் ஏற்றுக்கொள்ளும் என்னை இயேசுவே உம் சித்தம் நிறைவேற்றிடும் 2, இகமதில் துன்பங்கள் சூழ்ந்திடும் அகமது இன்பம் பெருகுவதால் மகத்தான சேவை ஆசையாய் செய்திட தக்கதோர் வேளையை ஈந்திட்டீரே - முற்று 3. நேசரே உம் அடிச்சுவடுகளை நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற நூல் சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் - முற்று 4. ஜீவனை இழந்தீரே சிலுவைதனில் சீஷன் எளியேன் எனக்காகவே ஜீவன் வெறுத்தும் சிலுவையை சகித்தும் இயேசுவே உம்மையே சேவிப்பேன் நான் - முற்று 5. தேகத்தில் நான் சித்தம் நிறைவேற்றியே வேகமாய் உம்மண்டை வந்திடுவேன் ஏகமாய் உம்மிடம் சீயோனில் இணைந்துமே யுகாயுகமாக சேவை செய்வேன் - முற்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Siluvaiyai Sumanthu Ammai Pin Sellavae Yesuvae Ennai Azhaittheerae Kalvaari Malaiyil Jeevanai Izhanthu Mae Nallathor Vazhiyai Vakuttheerae Murrumaay Paliyaay Pataikkiraen Undhan Thiruppaadhatthil Aerrukkollum Ennai Yesuvae Um Sittham Niraivaerritum 2, Igamathil Thunbanggal Soozhnthitum Agamathu Inbam Perukuvathaal Makatthaana Saevai Aasaiyaay Seythida Thakkathor Vaelaiyai Eenthitteerae - Murru 3. Naesarae Um Atichsuvatugalai Naesitthu Thodarvaen En Vaazhvinilae Yesuvae Um Thiru Karanggalil Pertra Nool Saevaiyai Niraivaertra Vaanjsikkiraen - Murru 4. Jeevanai Izhantheerae Siluvaidhanil Seeshan Eliyaen Enakkaagavae Jeevan Verutthum Siluvaiyai Sakitthum Yesuvae Ummaiyae Saevippaen Naan - Murru 5. Thaegatthil Naan Sittham Niraivaerriyae Vaegamaay Ummantai Vanthituvaen Aegamaay Ummidam Seeyonil Inainthumae Yukaayugamaaga Saevai Seyvaen - Murru