பாடல் #32841
ஆவியை மழை போல
🔤 Aaviyai Mazhai Pola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆவியை மழை போல பொழிந்திட வே ஆவியாம் கர்த்தரே இறங்கிடு வீர்! ஆவியின் வல்லமையை தந்திடவே ஆவியாய் என்னிலே அமர்ந்திடுவீர் ஊற்றிடுவீர் தேவா உமதன்பை தேற்றிடுவீர் எந்தன் ஆத்துமாவே வீற்றிடுவீர் என்னில் ஆவியாலே மாற்றிடுவார் என்னை உம் சாயலாய் 2. ஊற்றி அபிஷேகம் வாக்குரைத்தே தேற்றினீர் சீஷரை உமதன்பின் ஆறுதல் அளித்து என்னை திடப்படுத்தும் தேற்றரவாளனே இறங்கிடுவீர் - ஊற்றி 3. ஆவியின் வரங்களை பொழிந்தருளும் அனலுள்ள ஜீவியம் மலரச் செய்யும் ஆலோசனை தந்து வழி நடத்தி ஆவியில் அடியேனை ஆட்கொள்ளுவீர்! - ஊற்றி 4. ஜீவனால் மரணத்தை பரிகரித்து கிறிஸ்துவை மரித்தோரில் எழுப்பீரே சகலமும் ஜெயித்து நான் சமுகம் நிற்க சத்துவம் அளிப்பீரே ஜீவாவியே! - ஊற்றி 5. கரை திரை குறைகளை களைந்தென்னிலே கிறிஸ்துவின் நிறைவதில் வளரச் செய்யும் பறந்து நான் உம்மிடம் வீற்றிடவே மறுரூபம் படுத்துவார்! பரனாவியே - ஊற்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aaviyai Mazhai Pola Pozhinthida Vae Aaviyaam Karttharae Irangkitu Veer! Aaviyin Vallamaiyai Thanthidavae Aaviyaay Ennilae Amarnthituveer Oorrituveer Thaevaa Umathanpai Thaerrituveer Endhan Aatthumaavae Veerrituveer Ennil Aaviyaalae Maarrituvaar Ennai Um Saayalaay 2. Oorri Apishaegam Vaakkuraitthae Thaerrineer Seesharai Umathanpin Aarudhal Alitthu Ennai Thidappatutthum Thaertraravaalanae Irangkituveer - Oorri 3. Aaviyin Varanggalai Pozhindharulum Analulla Jeeviyam Malarach Seyyum Aalosanai Thanthu Vazhi Natatthi Aaviyil Atiyaenai Aatkolluveer! - Oorri 4. Jeevanaal Maranatthai Parigaritthu Kiristhuvai Maritthoril Ezhuppeerae Sakalamum Jeyitthu Naan Samugam Nirka Satthuvam Alippeerae Jeevaaviyae! - Oorri 5. Karai Thirai Kuraigalai Kalainthennilae Kiristhuvin Niraivathil Valarach Seyyum Paranthu Naan Ummidam Veerridavae Maruroobam Patutthuvaar! Paranaaviyae - Oorri