பாடல் #32831
எந்தன் உயர்ந்த
🔤 Endhan Uyarndha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உயர்ந்த கன்மலையே என்றும் மாறா அடைக்கலமே உன்னத உம் மறைவினில் வந்தடைந்தேன் உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் 1. கருவில் என்னை பின்தொடர்ந்து நல் அருவியாய் என்னும் தாகந்தீர்த்தீர் கிருபையாய் மலைபோல் சூழ்ந்தெனை நிதமும் அருமையாய் காத்தனீரே 2. தனிமை வருத்தி தளர்ந்திடும் போதும் தேற்றுவோரின்றியே திகைத்த போதும் இனிய உம் சுரமே உயிர்ப்பித்ததெனையே கனிந்துமே பெலனீந்தீரே 3. என் பெலன் விளங்கும் பூரணமாக உன் பெலவீனத்தில் என்றுரைத்தீரே கிலேயாத்தின் ஔஷதமாய் திகழ்ந்தீரே இயேசுவே நீரெனக்கு 4. தற்பரா உந்தன் சாயல் நான் அணிய அற்பனாம் என்னையும் அபிஷேகித்தார் நிறுத்திவிடும் உம்மில் தேறினோனாக நின் திரு சந்நிதியில் 5. விரைவில் வருவீர் மகிமையில் நாதா மறைந்தும்மில் உம்மிடம் வெளிப்படவே அர்ப்பணித்தேன் உம் கரமதிலென்றும் பொற்பரா நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Uyarndha Kanmalaiyae Enrum Maaraa Ataikkalamae Unnatha Um Maraivinil Vandhatainthaen Undhan Naamatthai Uyartthituvaen 1. Karuvil Ennai Pinthodarnthu Nal Aruviyaay Ennum Thaagantheerttheer Kirupaiyaay Malaipol Soozhnthenai Nidhamum Arumaiyaay Kaatthaneerae 2. Thanimai Varutthi Thalarnthitum Pothum Thaerruvorinriyae Thikaittha Pothum Iniya Um Suramae Uyirppitthathenaiyae Kaninthumae Pelaneentheerae 3. En Pelan Vilangkum Pooranamaaga Un Pelaveenatthil Enruraittheerae Kilaeyaatthin Aushathamaay Thigazhntheerae Yesuvae Neerenakku 4. Tharparaa Undhan Saayal Naan Aniya Arpanaam Ennaiyum Apishaekitthaar Nirutthivitum Ummil Thaerinonaaga Nin Thiru Sannithiyil 5. Viraivil Varuveer Makimaiyil Naathaa Marainthummil Ummidam Velippatavae Arppanitthaen Um Karamathilenrum Porparaa Natatthitumae