பாடல் #32826
துதிசெய் என் மனமே
🔤 Thuthisey En Manamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிசெய் என் மனமே உன் பரனேசுவை தினம் தினம் நினைந்தவர் உபகாரங்கள் மகத்வ கிரியை உன்னில் செய்த அவரை ஓ! உள்ள மே துதிப்பாய் எந்நாளுமே! 1. யாருமில்லா இந்த கானக வழியில் சீரிய தோழனவர் - அல்லேலூயா! "கைவிடேன் நான் காண பொழுதேனும் கைத்தலம் மறைத்துனையே" - என்றாரே - துதி 2. வாக்கு மாறாதவர் வாக்குத்தத்தங்களை வகுத்தாரே உந்தனுக்காய் - அல்லேலூயா! ஆக்குவார் யாவையும் உரைத்ததுபோல் நோக்கத்தை நிறைவேற்றுவார் - ஆ மனமே! - துதி 3. ஆவியால் கட்டினாரே சேர்த்துனதிடையே அன்பில் நீ நடந்திடவே - அல்லேலூயா! துன்பங்கள் பொன்னகர் ஏக தன் பெலன் தருகிறார் - எந்நாளும் - துதி 4. நேசரின் வருகையே விரைந்து வந்திடுதே ஆசையாய் விழித்தெழுவேன் - அல்லேலூயா! மணவாளன் வர வின் ஓசை ஒலிக்குது இனி இல்லை காலம் உனக்கே - இவ்வுலகில் - துதி 5. நீதியின் புறமாகும் சத்திய நகரம் ஜோதியாய் இலங்கிடுதே - அல்லேலூயா! தன் மணவாளன் நன்மணவாளியாய் எந்நாளும் விளங்கிடுவாய் - ஓ மனமே! - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthisey En Manamae Un Paranaesuvai Thinam Thinam Ninaindhavar Ubakaaranggal Makathva Kiriyai Unnil Seytha Avarai O! Ulla Mae Thuthippaay Ennaalumae! 1. Yaarumillaa Indha Kaanaka Vazhiyil Seeriya Thozhanavar - Allaelooyaa! "kaivitaen Naan Kaana Pozhuthaenum Kaitthalam Maraitthunaiyae" - Enraarae - Thuthi 2. Vaakku Maaraadhavar Vaakkutthatthanggalai Vakutthaarae Undhanukkaay - Allaelooyaa! Aakkuvaar Yaavaiyum Uraitthathupol Nokkatthai Niraivaerruvaar - Aa Manamae! - Thuthi 3. Aaviyaal Kattinaarae Saertthunathitaiyae Anpil Nee Natanthidavae - Allaelooyaa! Thunbanggal Ponnakar Aega Than Pelan Tharukiraar - Ennaalum - Thuthi 4. Naesarin Varukaiyae Virainthu Vanthituthae Aasaiyaay Vizhitthezhuvaen - Allaelooyaa! Manavaalan Vara Vin Osai Olikkuthu Ini Illai Kaalam Unakkae - Ivvulakil - Thuthi 5. Neethiyin Puramaakum Satthiya Nakaram Jothiyaay Ilangkituthae - Allaelooyaa! Than Manavaalan Nanmanavaaliyaay Ennaalum Vilangkituvaay - O Manamae! - Thuthi