பாடல் #32819
இன்ப இன்ப நதியே
🔤 Inba Inba Nathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப இன்ப நதியே - பரிசுத்த ஆவியே அன்பினால் எம் உள்ளங்களை நிறைத்திடுமே இன்னும் இன்னும் உம்மிலே ஆழ்ந்து நினைத்திடவே சொன்ன போல் இறங்கும் விண் தூய ஆவியே 1. காய்ந்து போன எலும்புகள் உயிரடைய பாய்ந்து ஜீவன் அளித்திடுமே ஓய்ந்து போன அனுபவம் மலர்ந்திடவே ஆய்ந்து எமக்கருள் செய்யுமே - இன்ப 2. அக்கினியால் சாம்பலாக தித்திடவே தக்கதோர் சமயம் இதுவே நீங்கிடவே கரை திரை குறைகளெல்லாம் ஆக்கிடவே உந்தன் சாயலாய் - இன்ப 3. விந்தையாகும் நின் சரீரம் சபையதுவை சந்தியும் நல் வரங்களாலே உந்தனது மகிமையில் வளர்ந்தோங்கவே எந்தையே கிரியை செய்யுமே - இன்ப 4. ஆதி அப்போஸ்தல டவர் உபதேசங்கள் மேதினியில் உயிர் பெறவே நீதியும் சத்தியம் நிறை சாலேம் புரத்தின் பாதைக்குமோர் தீபமாகுதே - இன்ப 5. மெல்கிசேதேக் ஆகும் பரிசுத்த ஆவியே நல்குவீர் நின் முறைமை கதை தொல்லுலகில் சேவை செய்ய பலர் எழும்ப வல்ல அபிஷேகம் ஊற்றும் - இன்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Inba Nathiyae - Parisuttha Aaviyae Anpinaal Em Ullanggalai Niraitthitumae Innum Innum Ummilae Aazhnthu Ninaitthidavae Sonna Pol Irangkum Vin Thooya Aaviyae 1. Kaaynthu Pona Elumpugal Uyirataiya Paaynthu Jeevan Alitthitumae Oynthu Pona Anubavam Malarnthidavae Aaynthu Emakkarul Seyyumae - Inba 2. Akkiniyaal Saambalaaga Thitthidavae Thakkathor Samayam Ithuvae Neengkidavae Karai Thirai Kuraigalellaam Aakkidavae Undhan Saayalaay - Inba 3. Vinthaiyaakum Nin Sareeram Sapaiyathuvai Santhiyum Nal Varanggalaalae Undhanathu Makimaiyil Valarnthonggavae Enthaiyae Kiriyai Seyyumae - Inba 4. Aathi Apposthala Tavar Ubathaesanggal Maethiniyil Uyir Peravae Neethiyum Satthiyam Nirai Saalaem Puratthin Paathaikkumor Theebamaakuthae - Inba 5. Melkisaethaek Aakum Parisuttha Aaviyae Nalkuveer Nin Muraimai Kathai Thollulakil Saevai Seyya Palar Ezhumba Valla Apishaegam Oorrum - Inba