பாடல் #32816
விலையேறும் சீயோன்தனின்
🔤 Vilaiyaerum Seeyonthanin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விலையேறும் சீயோன்தனின் சுதராக அழைத்தேனே நிலையில்லா உலகினின்றே விலையேறும் தூதுகள் உவந்துனக்களித்தேன் நிலையாகும் கிருபையுடன் 1. நேத்திரம் கனிந்த ஆத்துமம் உருகி நிதமும் துயரடைவாய் நதிப்போல் உன் இதயம் என் சமுகத்தில் ஒழுகவே பதி என்னில் தரித்திடுவாய் - விலை 2. சிறை ஏகும் உனது சுதர்தனை நினைந்து சுனை என கரைந்திடுவான் தெருக்களில் இடறியே கிடக்குது சத்தியங்கள் பரிசுத்த ஸ்தல கற்களாம் - விலை 3. பானிய பலியும் போஜன பலியும் மனிதரில் அற்றுப்போயிற்றே மனந்தனில் சிந்தனையே திரு சீயோனே செய்குவாய் இனிகாலம் இல்லை உனக்கே - விலை 4. கரை திரை குறையும் உலவும் உல்லாசமும் சபைதனில் வெளிப்படுதே எனது மணாளியாம் எனது ஆலயமென மனமதில் நினைத்தாயில்லை - விலை 5. அவரவர்க்களிக்கும் பிரதிபலனுடனே விரைந்து நான் வெளிப்படுவேன் மதில் நீயே சீயோனின் காவல்காரர் உன்மீதிலே மனந்தெளிந் தெழும்பிடாயோ? - விலை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilaiyaerum Seeyonthanin Sudharaaga Azhaitthaenae Nilaiyillaa Ulakininrae Vilaiyaerum Thoothugal Uvanthunakkalitthaen Nilaiyaakum Kirupaiyudan 1. Naetthiram Kanindha Aatthumam Uruki Nidhamum Thuyarataivaay Nathippol Un Idhayam En Samugatthil Ozhugavae Pathi Ennil Tharitthituvaay - Vilai 2. Sirai Aekum Unathu Sudharthanai Ninainthu Sunai Ena Karainthituvaan Therukkalil Idariyae Kidakkuthu Satthiyanggal Parisuttha Sthala Karkalaam - Vilai 3. Paaniya Paliyum Pojana Paliyum Manidharil Arruppoyirrae Manandhanil Sindhanaiyae Thiru Seeyonae Seykuvaay Inikaalam Illai Unakkae - Vilai 4. Karai Thirai Kuraiyum Ulavum Ullaasamum Sapaidhanil Velippatuthae Enathu Manaaliyaam Enathu Aalayamena Manamathil Ninaitthaayillai - Vilai 5. Avaravarkkalikkum Pirathibalanudanae Virainthu Naan Velippatuvaen Mathil Neeyae Seeyonin Kaavalkaarar Unmeethilae Mananthelin Thezhumpitaayo? - Vilai