பாடல் #32812
எந்தன் நேசர் இயேசு
🔤 Endhan Naesar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நேசர் இயேசு எனக்குடையவரே சொந்தம் நான் அவருக்கு இவ்வான்புவியிலே இன்பங்களின் ஊற்று ஆண்டவரிலே அன்புடனே தேற்றியே அனைப்பவரே - எந்தன் 1. ஆரங்கள் கொண்டுமே அலங்கரித்து - என்னை தீராத நேசத்தால் நடத்துகிறார் வாரும் என் நேசரே மான் மரை போலவே தீரும் என் சோகங்கள் நேசத்தினால் - எந்தன் 2. வெண்மையும் சிவப்பும் என் நேசர் தானே - இந்த மண்ணில் யாருண்டு தன்னிகர்! எண்ணில்லா மாந்தருள் என் நேசர் இவர். கண்கொள்ளா மாட்சிமை உற்றவரே - எந்தன் 3. சந்திரன் போலவே மாவெழிலும் - சபை இந்திரன் போல் சோபையேறிடுதே உற்றதோர் தேவாட்டுக்குட்டியின் காந்தையாய் வீற்றிடுவேன் அவர் சிங்காசனம் - எந்தன் 4. தண்ணீர்கள் அன்பு அணைத்திடும் - இதை தண்டிடுமோ பெரும் வெள்ளங்களும் முத்திரை நான் அவன் நெஞ்சம் புயத்தில் மித்திரன் எனக்கு யாத்திரையில் - எந்தன் 5. நேசத்தின் பாத்திரம் நான் அவனுக்கு - என் மேல் வீசிடுதே அன்பின் கொடி என்னுள்ளம் பொங்குதே நன்றியால் நிறைந்து என்றென்றும் சாற்றுவோன் ஸ்தோத்திரமே - எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naesar Yesu Enakkutaiyavarae Sondham Naan Avarukku Ivvaanpuviyilae Inbanggalin Oorru Aandavarilae Anpudanae Thaerriyae Anaippavarae - Endhan 1. Aaranggal Kontumae Alanggaritthu - Ennai Theeraadha Naesatthaal Natatthukiraar Vaarum En Naesarae Maan Marai Polavae Theerum En Soganggal Naesatthinaal - Endhan 2. Venmaiyum Sivappum En Naesar Thaanae - Indha Mannil Yaaruntu Thannigar! Ennillaa Maandharul En Naesar Ivar. Kankollaa Maatsimai Urtravarae - Endhan 3. Santhiran Polavae Maavezhilum - Sapai Inthiran Pol Sopaiyaerituthae Urtrathor Thaevaattukkuttiyin Kaanthaiyaay Veerrituvaen Avar Singkaasanam - Endhan 4. Thanneerkal Anpu Anaitthitum - Ithai Thantitumo Perum Vellanggalum Mutthirai Naan Avan Nenjjam Puyatthil Mitthiran Enakku Yaatthiraiyil - Endhan 5. Naesatthin Paatthiram Naan Avanukku - En Mael Veesituthae Anpin Koti Ennullam Pongkuthae Nanriyaal Nirainthu Enrenrum Saarruvon Sthotthiramae - Endhan