பாடல் #32811
ஆசை மணாளா நேச
🔤 Aasai Manaalaa Naesa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசை மணாளா நேச கண்ணாளா என்று நீர் வருவீர் சோபிதந்தனிலே ஏங்குதே எந்தன் உள்ளமே 1. நாட்களும் புல்லின் பூவைப்போல் உதிர நாதனே தாமதம் ஏன்? நானிலம் ஏங்குதே தவிக்கிறார் தூயவர் நாயகனே வருவீர் - ஆசை 2. எக்காளம் முழங்கும் அக்கணமதிலே அக்களிப்புடன் தூயவர் எக்கண நொடியில் மறுரூபமாகியே அக்கரை தன்னில் சேருவார் - ஆசை 3. தேகம் அழிவின் போர்வையை களைந்தே காகம் நித்திய வீடை ஏகமாய் தரிக்க ஆவலாய் நிற்கிறார் வேகம் வாரும் மணாளனே - ஆசை 4. அப்போஸ்தலர் வரும் நல் உபதேசத்தால் ஒப்புரவான சபையை எப்போதும் உமது சந்நிதி நிறுத்த ஒப்பில்லா நேசர் வருவீர் - ஆசை 5. உயிரும் உடலும் போல சீயோன் காலமும் துயர் நீங்க மகிழ் கொள்ளவே அயராது கண்களும் நோக்கி நின்றிடுதே உயர் மணவாளா வாரீரோ? - ஆசை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasai Manaalaa Naesa Kannaalaa Enru Neer Varuveer Sopidhandhanilae Aengkuthae Endhan Ullamae 1. Naatkalum Pullin Poovaippol Uthira Naadhanae Thaamatham Aen? Naanilam Aengkuthae Thavikkiraar Thooyavar Naayakanae Varuveer - Aasai 2. Ekkaalam Muzhangkum Akkanamathilae Akkalippudan Thooyavar Ekkana Notiyil Maruroobamaakiyae Akkarai Thannil Saeruvaar - Aasai 3. Thaegam Azhivin Porvaiyai Kalainthae Kaagam Nitthiya Veetai Aegamaay Tharikka Aavalaay Nirkiraar Vaegam Vaarum Manaalanae - Aasai 4. Apposthalar Varum Nal Ubathaesatthaal Oppuravaana Sapaiyai Eppothum Umathu Sannithi Niruttha Oppillaa Naesar Varuveer - Aasai 5. Uyirum Udalum Pola Seeyon Kaalamum Thuyar Neengga Makizh Kollavae Ayaraathu Kankalum Nokki Ninrituthae Uyar Manavaalaa Vaareero? - Aasai