பாடல் #32810
மகிமையால் நிறைந்தவர்
🔤 Makimaiyaal Niraindhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மகிமையால் நிறைந்தவர் புது சாலேம் நகரே வகித்திடுவாயே மணவாட்டியின் நிலையே அகிலத்தில் அவர் சித்தம் செய்ததால் நீயே மகிபனைத் யேசு உந்தன் மணவாளனே இணையில்லா பிரபையால் புகழ் அடைந்தாயே இணைந்தாயு ன் மணவாளன் இயேசுவினோடே துணையாகும் உன்னிலவர் வாசம் செய்வாரே எருசலேமே நவ எருசலேமே 2. திருப்பரன் குணங்கள் உன் அலங்காரமே அருமையாம் அவர் சிந்தை மகிமையுமாமே அருந்துயர் பாடுகள் நின் உடையாகுமாமே தருமவர் ஜெயம் உந்தன் கொடியாகுமாமே - இணை 3. அசைவில்லா மூலைக்கல்லாம் இயேசுவின் மேலே இசைந்ததால் திருமண நீயாகுவாயே ஆசையுடன் சேவிப்பாயா நேசரை நீயே வீசிடுதே அவர் அன்பின் கொடி உந்தன் மேலே - இணை 4. கறைதிரை குறைவற்ற மாசற்ற சபையே மறைந்தே கன் மலை தனில் தங்கும் புறாவே உறைவிடம் உனக்குண்டோ இத்தரையதிலே நிறைந்தவர் பூரணமாய் இலங்குகிறாயே - இணை 5. தன்னிகரில்லா தோர் உன்னத நகரே பன்னிரு கற்கள் உந்தன் விலையேறும் குணமே கன்னிகையாக உன்னை காத்ததினாலே . பொன்புரியாகி அதில் மகிழ்கொள்ளுவாயே - இணை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Makimaiyaal Niraindhavar Puthu Saalaem Nakarae Vakitthituvaayae Manavaattiyin Nilaiyae Akilatthil Avar Sittham Seythathaal Neeyae Makibanaith Yaesu Undhan Manavaalanae Inaiyillaa Pirapaiyaal Pugazh Atainthaayae Inainthaayu N Manavaalan Yesuvinotae Thunaiyaakum Unnilavar Vaasam Seyvaarae Erusalaemae Nava Erusalaemae 2. Thirupparan Kunanggal Un Alangkaaramae Arumaiyaam Avar Sinthai Makimaiyumaamae Arunthuyar Paatugal Nin Utaiyaakumaamae Tharumavar Jeyam Undhan Kotiyaakumaamae - Inai 3. Asaivillaa Moolaikkallaam Yesuvin Maelae Isaindhathaal Thirumana Neeyaakuvaayae Aasaiyudan Saevippaayaa Naesarai Neeyae Veesituthae Avar Anpin Koti Undhan Maelae - Inai 4. Karaithirai Kuraivartra Maasartra Sapaiyae Marainthae Kan Malai Thanil Thangkum Puraavae Uraividam Unakkunto Ittharaiyathilae Niraindhavar Pooranamaay Ilangkukiraayae - Inai 5. Thannigarillaa Thor Unnatha Nakarae Panniru Karkal Undhan Vilaiyaerum Kunamae Kannikaiyaaga Unnai Kaatthathinaalae . Ponpuriyaaki Athil Makizhkolluvaayae - Inai