பாடல் #32808
கண்டேன் இதோ நான்
🎙 கிறிஸ்தவ பாடல்
கண்டேன் இதோ நான் கல்வாரியின் அன்பு விண்ணத் ஆவியின் உகந்த சேவை உமக்காய் செய்யவே வந்தேன் இதோ நான் வந்தேன் இதோ நான் 1. கண்ணீரின் தாழ்வரையதினில் நண்ணியே கடந்திட வரும் அண்ணலே உமைதரும் பாடுகள் எண்ணி எண்ணியே நான் திடனடைந்திடுவேன் - கண் 2. சேவிக்கவே புவியினின்றழைத்தீர் கூவியே அழிவிலா மொழியால் ஆவியின் திருப்பணி யதனை ஆணையால் அளித்தீர் இணைந்திட உம்மிலே - கண் 3. தேறியோராய் எவரையும் நிறுத்த பாறையாம் பரனும்மில் மனையாய் என்னிலே அளவில்லா உமது வல்லமை பெருக கிருபையே பகர்ந்தீர் - கண். 4. மெல்கிசேதேக் நல் முறையில் செல்லவே சிறியது சிறந்த நல்ல தோர் முன்னோடியாக வல்ல தேசிகரே திரை கடந்தனீரே - கண் 5. காலமதாய் சபை வெளிப்படும் சாந்தன் உம் குணங்கள் நிறைவாய் சீயோன் இணைந்ததனுடனே சீர் மணவாளியாய் விளங்கும் நாள் அதுவே - கண்.