பாடல் #32807
வாரும் தோழனே
🔤 Vaarum Thozhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தோழனே - தூய இயேசு இதோ தொங்குகிறார் சேரும் இந்தக் காட்சி காண உருகாதோ உந்தன் உள்ளமே 1. கல்வாரியில் கொட்ட சிலுவை மரத்தில் மாண்டார் அல்லல் போக்கும் தூய வல்ல இரத்தம் உனக்கபயமே சொல்லில் அடங்குமோ நல்ல நேசர் பாடுகளே - வாரும் 2. குஷ்டம் நீக்கியே சுகமாக செய்த கரங்களே குன்மம் தனை நீக்கி குணமாக்கும் திருக்கரங்களே குருதி சிந்திடும் குரு இயேசு கரங்கள் - வாரும் 3. மன்னியும் என்றார் தமக் கின்னல் செய்தார் கிரங்க இன்னும் மனமேவி மன்னிப்பே தயை செய்குவாரே இன்னும் தாமதமேன் கனிந்தே கண்ணோக்கிடுவாய் - வாரும் 4. ஞானஸ்நானத்தின் தரித்தவர் மரண சித்தமே ஞான ஒளியான ஞான வேத கிறிஸ்தேசுவின் நல் ஞானமெய்தியே ஞால இன்பம் நீக்கிடுமே- வாரும் 5. உய்த்து ஆவியே அருள் - உய்த்து வாழும் ஜீவன் மெய்யாய் மனமெய்து சித்தம் செய்து ஜெயம் அடையவே உத்து நோக்கும் மெய்யனேசின் காயங்களே - வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thozhanae - Thooya Yesu Itho Thongkukiraar Saerum Indhak Kaatsi Kaana Urukaatho Undhan Ullamae 1. Kalvaariyil Kotta Siluvai Maratthil Maantaar Allal Pokkum Thooya Valla Rattham Unakkapayamae Sollil Adangkumo Nalla Naesar Paatugalae - Vaarum 2. Kushtam Neekkiyae Sugamaaga Seytha Karanggalae Kunmam Thanai Neekki Kunamaakkum Thirukkaranggalae Kuruthi Sinthitum Kuru Yesu Karanggal - Vaarum 3. Manniyum Enraar Thamak Kinnal Seythaar Kirangga Innum Manamaevi Mannippae Thayai Seykuvaarae Innum Thaamathamaen Kaninthae Kannokkituvaay - Vaarum 4. Njaanasnaanatthin Tharitthavar Marana Sitthamae Njaana Oliyaana Njaana Vaedha Kiristhaesuvin Nal Njaanameythiyae Njaala Inbam Neekkitumae- Vaarum 5. Uytthu Aaviyae Arul - Uytthu Vaazhum Jeevan Meyyaay Manameythu Sittham Seythu Jeyam Ataiyavae Utthu Nokkum Meyyanaesin Kaayanggalae - Vaarum