பாடல் #32805
கண்மணி போல் உன்னை
🔤 Kanmani Pol Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணி போல் உன்னை கண் மலர்ந்து காப்பேன் கண்ணுறல் பாதையதனில் கண்ணால் நடத்துவேன் 1. வாக்குத்தத்தங்கள் நான் உண்மையுள்ளவரே ஆக்குவேன் திருநோக்கம் உந்தன் தானே தக்கதோர் உறுதுணை காவினில் நானே மிக்கதோர் கிருபையின் சாகரம் - கண் 2. வான்புவி ஒழிந்தாலும் என் ஆணை உனக்காய் இன்னமும் நிலைக்குதே விண்மதியாக என்னைப் போல் துணையேது இல்லையே மானே உன்னையே உள்ளங்கைகளில் வரைந்தேனே - கண் 3. இரத்தமே சொரிந்துன்னை மீட்டவர் நானல்லோ சித்தம் செய்ய ஆவி தந்தேன் பாராயோ நித்திய மொழிகளால் தேற்றிடுவேனே சத்தியர் எந்தன் முகம் நோக்குவாய் தேனே - கண் 4. ஆவியின் ஊழியம் தூயவர் சபையில் மேவியே பங்கடைய கிருபை செய்தேன் சேவிக்க காலமதில் அழைத்தேனே கேளாய் தாவியே வருவாய் என் வாக்கை நம்பிடுவேன் - கண் 5. நினையாத நேரத்தில் தந்திடுவேன் நான் மலையாம் சபைதனையே சேர்க்க என்னுடனே அனைத்து உன் துயர்தனை போக்கிடுவேனே உனை எந்தன் துணையென மாற்றிடுவேனே - கண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmani Pol Unnai Kan Malarnthu Kaappaen Kannural Paathaiyathanil Kannaal Natatthuvaen 1. Vaakkutthatthanggal Naan Unmaiyullavarae Aakkuvaen Thirunokkam Undhan Thaanae Thakkathor Uruthunai Kaavinil Naanae Mikkathor Kirupaiyin Saagaram - Kan 2. Vaanpuvi Ozhinthaalum En Aanai Unakkaay Innamum Nilaikkuthae Vinmathiyaaga Ennaip Pol Thunaiyaethu Illaiyae Maanae Unnaiyae Ullangkaigalil Varainthaenae - Kan 3. Ratthamae Sorinthunnai Meettavar Naanallo Sittham Seyya Aavi Thanthaen Paaraayo Nitthiya Mozhigalaal Thaerrituvaenae Satthiyar Endhan Mugam Nokkuvaay Thaenae - Kan 4. Aaviyin Oozhiyam Thooyavar Sapaiyil Maeviyae Panggataiya Kirupai Seythaen Saevikka Kaalamathil Azhaitthaenae Kaelaay Thaaviyae Varuvaay En Vaakkai Nampituvaen - Kan 5. Ninaiyaadha Naeratthil Thanthituvaen Naan Malaiyaam Sapaidhanaiyae Saerkka Ennudanae Anaitthu Un Thuyarthanai Pokkituvaenae Unai Endhan Thunaiyena Maarrituvaenae - Kan