பாடல் #32803
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
🔤 Parisutthar Parisutthar Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே நீர் தரிசித்தும் பாதந்தனை துதி சொல்லுவோம் கரிசனையோடெம்மை கைத்தலந்தனிலே பரிவுடன் சுமந்தீர் அன்பே நீர் - பரிசுத்தர் 1. சோதனையதிலெமக்கோர் ஜெயக் கொடியே வேதனையதிலுற்ற ஒப்பற்ற துணையே மேதினி தன் பெறும் சீயோனின் வழியாய் வேதனே எம்மிலே ஜீவிக்கிறீர் - பரி 2. கங்குல் தனிலே கலிபோக்கிட கனிந்தே நீங்கிடாது சீயோனின் தீபமாய் திகழ்ந்தார் பங்குறும் தினம் வரை உன் சாயலிலே பாங்குடன் காப்பீரே காசினியில் -- பரி 3. இத்தரை ஒழித்து மே சித்திரை கடந்தே இத்தரையதில் துயர் நித்திரை யுறவே சத்தியரே நீர் வருவீரோ எக்கணம் நித்திய மகிமையை அடைந்திடவே - பரி 4. யாவையும் எனக்காக செய்து முடிப்பீர் யாரிலும் சிறந்தவர் இயேசுவே எமக்கே யாவே தம் மகிமையை கண்டதால் உம்மிலே யார் பின்னே ஏகுவோம் நீரன்றி - பரி 5. துயிலெழும் காலமிதே ஆவியில் நிறைந்து உயிரடைந்தவர் சேவை செய்திட வருவீர் அதி சுதந்திரம் பெறும் காலை விடாதே பதிவர் சபையுனக்கோர் உறவே - பரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Parisutthar Yesuvae Neer Tharisitthum Paadhandhanai Thuthi Solluvom Karisanaiyotemmai Kaitthalandhanilae Parivudan Sumantheer Anpae Neer - Parisutthar 1. Sodhanaiyathilemakkor Jeyak Kotiyae Vaedhanaiyathilurtra Oppartra Thunaiyae Maethini Than Perum Seeyonin Vazhiyaay Vaedhanae Emmilae Jeevikkireer - Pari 2. Kangkul Thanilae Kalipokkida Kaninthae Neengkitaathu Seeyonin Theebamaay Thigazhnthaar Pangkurum Thinam Varai Un Saayalilae Paangkudan Kaappeerae Kaasiniyil -- Pari 3. Ittharai Ozhitthu Mae Sitthirai Katanthae Ittharaiyathil Thuyar Nitthirai Yuravae Satthiyarae Neer Varuveero Ekkanam Nitthiya Makimaiyai Atainthidavae - Pari 4. Yaavaiyum Enakkaaga Seythu Mutippeer Yaarilum Sirandhavar Yesuvae Emakkae Yaavae Tham Makimaiyai Kandathaal Ummilae Yaar Pinnae Aekuvom Neeranri - Pari 5. Thuyilezhum Kaalamithae Aaviyil Nirainthu Uyirataindhavar Saevai Seythida Varuveer Athi Sudhanthiram Perum Kaalai Vitaathae Pathivar Sapaiyunakkor Uravae - Pari