பாடல் #32802
சீயோனின் புரமே உன்னத
🔤 Seeyonin Puramae Unnatha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சீயோனின் புரமே உன்னத வாசமே சேவிப்போம் கண்டவர் பொன்முகமே நேசிப்போம் உவந்தே சேவிப்போம் அவர் போல் ருசித்தே பிதாவின் அன்பு யுகங்களாய் சீயோனின் மாமலையே - தாதையின் பூரணமே நவ்வியதோர் கவியே - மகிழ்ந்தே நவின்றே துதி சாற்றுவோம் 2. தாழ்மையின் வழியே கண்ணீரோடே கியோர் வாழ்வினை அவர்க்காய் அளித்தவர் ஆழ்ந்தவர் அன்பிலே நீடூழி நிலைத்தே அழிவற்ற முடிசூடி ஆனந்திப்பார் 3. தாயும் தந்தையுடன் மக்கள் மற்றெவரும் தாயகம் துணையும் துறந்தவர் அண்ணகராகவே அவனியில் திகழ்ந்தோர் அரண்களாய் சீயோன்தனில் விளங்குவார் 4. தேகத்தின் பாடுகள் ஏகமாய் சுமந்தே தாகம் சபைக்காய் சகித்தவரே அப்போஸ்தலர் வரும் சத்தியம் அதனை அஸ்திபாரமாகத் தம்மில் அடைந்தவர் 5. பிதாவை போலவே இயேசுவின் சிந்தையாய் பிதாக்களாகவே ஆக்கப்பட்டோர் பூரண வடிவம் சீயோனின் சிகரம் பூரண சுதந்திரமே அவர்க்கன்றோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Seeyonin Puramae Unnatha Vaasamae Saevippom Kandavar Ponmugamae Naesippom Uvanthae Saevippom Avar Pol Rusitthae Pithaavin Anpu Yuganggalaay Seeyonin Maamalaiyae - Thaathaiyin Pooranamae Navviyathor Kaviyae - Makizhnthae Navinrae Thuthi Saarruvom 2. Thaazhmaiyin Vazhiyae Kanneerotae Kiyor Vaazhvinai Avarkkaay Alitthavar Aazhndhavar Anpilae Neetoozhi Nilaitthae Azhivartra Mutisooti Aananthippaar 3. Thaayum Thanthaiyudan Makkal Marrevarum Thaayakam Thunaiyum Thurandhavar Annakaraagavae Avaniyil Thigazhnthor Arankalaay Seeyonthanil Vilangkuvaar 4. Thaegatthin Paatugal Aegamaay Sumanthae Thaagam Sapaikkaay Sakitthavarae Apposthalar Varum Satthiyam Adhanai Asthipaaramaagath Thammil Ataindhavar 5. Pithaavai Polavae Yesuvin Sinthaiyaay Pithaakkalaagavae Aakkappattor Poorana Vativam Seeyonin Sigaram Poorana Sudhanthiramae Avarkkanro