பாடல் #32801
விளங்குமென் விசுவாசம்
🔤 Vilangkumen Visuvaasam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விளங்குமென் விசுவாசம் மிளிறும் சொன்னது போல் ஒளிர் மிகு பரிசோதனையில் - நின்று 1. அக்கினியோடு நடந்திடும் வேளை இக்கட்டில் அழியா தென் விசுவாசமே தக்க நாள் கிருபைகள் - மிக்க அளித்தென்னை எக்கணம் ஜெயமாய் ஜொலிக்க செய்வாரே (2) - விள 2. கால் தடுமாறி சறுக்கிடும் நேரம் மெல்ல கை தாங்கியவர் நடத்தினார் நல்லதோர் துணையென இயேசுவே எந்தனையே வல்லதாம் புயத்தால் நிறுத்திடுவாரே - விள 3. சாவின் நிழலில் நடப்பினும் நானே ஆவியே நடத்துவார் தீபமாய் ஜீவிக்க அனுதினமும் வல்லதோர் பெலன்தனை மேவியே அருள்வார் அபிஷேகத்தாலே - விள 4. வாண்டலம் மீதில் விண்ணுடுவானோர் மண்டலம் வீழ்ந்திடும் வேளையிது மாண்டிடா அளித்தென்றும் தம் திரு வசனங்கள் ஆண்டென்னை நடத்தி ஜெயம் தருவாரே - விள 5, மாறுமோ சீயோன் பூவதிர்ந்தாலும் மாசுறுமோ சபை சோதனையில் மாவல்ல அரணுண்டே காத்திட விசுவாசம் மாவரும் ஜீவியம் இயேசுவில் அடைந்தேன் - விள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilangkumen Visuvaasam Milirum Sonnathu Pol Olir Miku Parisodhanaiyil - Ninru 1. Akkiniyotu Natanthitum Vaelai Ikkattil Azhiyaa Then Visuvaasamae Thakka Naal Kirupaigal - Mikka Alitthennai Ekkanam Jeyamaay Jolikka Seyvaarae (2) - Vila 2. Kaal Thatumaari Sarukkitum Naeram Mella Kai Thaangkiyavar Natatthinaar Nallathor Thunaiyena Yesuvae Endhanaiyae Vallathaam Puyatthaal Nirutthituvaarae - Vila 3. Saavin Nizhalil Natappinum Naanae Aaviyae Natatthuvaar Theebamaay Jeevikka Anuthinamum Vallathor Pelanthanai Maeviyae Arulvaar Apishaegatthaalae - Vila 4. Vaandalam Meethil Vinnutuvaanor Mandalam Veezhnthitum Vaelaiyithu Maantitaa Alitthenrum Tham Thiru Vasananggal Aantennai Natatthi Jeyam Tharuvaarae - Vila 5, Maarumo Seeyon Poovathirnthaalum Maasurumo Sapai Sodhanaiyil Maavalla Aranuntae Kaatthida Visuvaasam Maavarum Jeeviyam Yesuvil Atainthaen - Vila