பாடல் #32799
கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
🔤 Kiristhaesu Uyirtthezhunthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் மரித்தோரில் முதற் பலனாகிய பாதாளம் நடுங்கிட வேதாளம் ஒடுங்கிட ஆதவன் ஜெயித்தெழுந்தார் 1. மரணமதின் முள்ளினை முறித்தார் தம் மரணத்தால் அறவே அகற்ற வே அடிமையின் நுகந்தனை வெற்றி வேந்தர் எழுந்தார் - கிறிஸ்தேசு 2. எழுந்த இயேசு ராஜனே - அழிவை காண்பதில்லை வீழ்ந்தோர் வழுவாது நிறுத்த தம் முன்னிலை ஆழ்ந்த அன்பு உடையவர் - கிறிஸ்தேசு 3. மா பரிசுத்த ஆவியால் - மரித்தோரினின்றெழுந்தார் நேசமுள்ள சரீரம் சபையதின் சிரசாக ஆசித்தே வென்றெழுந்தார் - கிறிஸ்தேசு 4. யாவையும் தமது திரு - பாதங்கட்கு கீழ்ப்படுத்தும் ஆவியின் செயலாலே அழிவினை அழிப்பவர் சாவை நீக்கும் மருந்தே - கிறிஸ்தேசு 5, ஜீவனின் அதிபதியே சபையின் அரும் சிரசாய் ஜோதியாய் நடந்தவர் அதன் இடைதனிலென்றும் கேதம் போக்க எழுந்தார் - கிறிஸ்தேசு 6. ஆவியும் மணவாட்டி யும் - வாரும் கர்த்தாவே எனவே ஆதரைதனில் அவர் வரும் வேளை நெருங்காதே ஆமென் வாரும் என் பீரோ - கிறிஸ்தேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhaesu Uyirtthezhunthaar Maritthoril Mudhar Palanaakiya Paathaalam Natungkida Vaethaalam Otungkida Aadhavan Jeyitthezhunthaar 1. Maranamathin Mullinai Muritthaar Tham Maranatthaal Aravae Agartra Vae Atimaiyin Nugandhanai Verri Vaendhar Ezhunthaar - Kiristhaesu 2. Ezhundha Yesu Raajanae - Azhivai Kaanpathillai Veezhnthor Vazhuvaathu Niruttha Tham Munnilai Aazhndha Anpu Utaiyavar - Kiristhaesu 3. Maa Parisuttha Aaviyaal - Maritthorininrezhunthaar Naesamulla Sareeram Sapaiyathin Sirasaaga Aasitthae Venrezhunthaar - Kiristhaesu 4. Yaavaiyum Thamathu Thiru - Paadhanggatku Keezhppatutthum Aaviyin Seyalaalae Azhivinai Azhippavar Saavai Neekkum Marunthae - Kiristhaesu 5, Jeevanin Athibathiyae Sapaiyin Arum Sirasaay Jothiyaay Natandhavar Adhan Itaidhanilenrum Kaedham Pokka Ezhunthaar - Kiristhaesu 6. Aaviyum Manavaatti Yum - Vaarum Kartthaavae Enavae Aadharaidhanil Avar Varum Vaelai Nerungkaathae Aamen Vaarum En Peero - Kiristhaesu