பாடல் #32783
முடிவேயில்லை உம்
🔤 Mutivaeyillai Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிவேயில்லை உம் ஆண்டுகள் போல் இயேசுவே அடியிலே நின் திரு கிருபை நீடித்தே நிலைத்திடுதே 1. மருவில் நீர் நீரோடையாய் வருவீர் என் தாகந்தீர்ப்பீர் நின் ரூபம் நோக்க மனம் இன்னும் காவினில் கதறிடுதே - முடி 2. அரசே நான் அபிஷேகத்தால் சிரசாய் தீர்ந்தீரே சபையின் ஜீவன் மா பெலனாய் ஜீவ ஆவியே எழுந்தருள்வீர் - முடி 3. பகரும் நின் வரங்களையே உகந்தும்மில் ஸ்திரப்படவே அப்போஸ்தலர் காலம் போல் இப்போ சந்திப்பீர் எழுப்புதலால் - முடி 4. தற்பரா நின் சிறப்புரைக்க அற்புதங்கள் நடைபெறவே உவந்தும்மை சேவிக்க நவ ஜீவியோர் எழுப்பிடுமே - முடி 5. நற்பிதாவின் திருகுணங்கள் நிறைந்த புரிய சீயோனே சொந்தமாய் கொள்ள தன்னை தந்த காலங்கள் இன்னுமெத்தனை - முடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutivaeyillai Um Aantugal Pol Yesuvae Atiyilae Nin Thiru Kirupai Neetitthae Nilaitthituthae 1. Maruvil Neer Neerotaiyaay Varuveer En Thaagantheerppeer Nin Roobam Nokka Manam Innum Kaavinil Katharituthae - Muti 2. Arasae Naan Apishaegatthaal Sirasaay Theerntheerae Sapaiyin Jeevan Maa Pelanaay Jeeva Aaviyae Ezhundharulveer - Muti 3. Pakarum Nin Varanggalaiyae Uganthummil Sthirappatavae Apposthalar Kaalam Pol Ippo Santhippeer Ezhuppudhalaal - Muti 4. Tharparaa Nin Sirappuraikka Arpudhanggal Nataiperavae Uvanthummai Saevikka Nava Jeeviyor Ezhuppitumae - Muti 5. Narpithaavin Thirukunanggal Niraindha Puriya Seeyonae Sondhamaay Kolla Thannai Thandha Kaalanggal Innumetthanai - Muti