பாடல் #32781
எந்தன் இதயத்தின்
🔤 Endhan Idhayatthin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இதயத்தின் தொனியாம் அன்பரென் இயேசுவே உந்தன் கனிமொழியே - மாறா (2) உவந்து போற்றிடுவேன் - நான் (2) 1. இன்ப நதியாய் இன்னல் அகற்ற வந்தார் என்னைத் தேற்றவே - அன்பே பூரண கிருபை யாயுள்ளில் பரவி பெருகுதே என்றும் எந்தன் ஜீவன் ஊற்றியுந்தன் சொந்தமாய் படைத்திட்டேனே - ஆ 2. நேயமுடனே நாயனுமக்காய் சாதனை புரிய - அன்பே ஆவியின் அபிஷேகத்தால் அவனிதனில் அழைத்தீரே என்னவோ! நான் நோக்கம் என்னில் இன்னமும் நினைந்திடுவேன் - ஆ 3. தேவசுதராய் தூய சபையாய் மேதினியில் திகழ - அன்பே அநாதியாய் நினைந்தோர் நீரே அன்பர் திரு சித்தம் போல் குத்தமில்லா உந்தன் அன்பு கேதும் யான் செய்யலாகுமோ - ஆ 4. நாட்கள் நொடியில் கடந்து செல்லாதே மீட்டர் நீர் வருவீர் - அன்பே திரையாம் தேகம் வழியேகி பரிசுத்தர் மறைகிறார் வேண்டும் நாதா வேலையாட்கள் வேண்டுதற் கிரங்கிடுவீர் - ஆ 5. சீயோன் மீதிலே ஆவல் கொண்ட நாள் ஜீவியமுடையோர் - அன்பே சிறந்திலங்கும் திருநாளை சிந்தித்தால் என்ன மா மகிமை ஆமென் இயேசுவே நீர் வாரும் ஆவலாய் ஏங்குதே சபை - ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Idhayatthin Thoniyaam Anbaren Yesuvae Undhan Kanimozhiyae - Maaraa (2) Uvanthu Porrituvaen - Naan (2) 1. Inba Nathiyaay Innal Agartra Vanthaar Ennaith Thaertravae - Anpae Poorana Kirupai Yaayullil Paravi Perukuthae Enrum Endhan Jeevan Oorriyundhan Sondhamaay Pataitthittaenae - Aa 2. Naeyamudanae Naayanumakkaay Saadhanai Puriya - Anpae Aaviyin Apishaegatthaal Avanidhanil Azhaittheerae Ennavo! Naan Nokkam Ennil Innamum Ninainthituvaen - Aa 3. Thaevasudharaay Thooya Sapaiyaay Maethiniyil Thigazha - Anpae Anaathiyaay Ninainthor Neerae Anbar Thiru Sittham Pol Kutthamillaa Undhan Anpu Kaethum Yaan Seyyalaakumo - Aa 4. Naatkal Notiyil Katanthu Sellaathae Meettar Neer Varuveer - Anpae Thiraiyaam Thaegam Vazhiyaeki Parisutthar Maraikiraar Vaentum Naathaa Vaelaiyaatkal Vaentudhar Kirangkituveer - Aa 5. Seeyon Meethilae Aaval Konda Naal Jeeviyamutaiyor - Anpae Siranthilangkum Thirunaalai Sinthitthaal Enna Maa Makimai Aamen Yesuvae Neer Vaarum Aavalaay Aengkuthae Sapai - Aa