பாடல் #32779
அன்பர் இயேசுவின்
🔤 Anbar Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பர் இயேசுவின் அடிகள் இதோ இன்ப சீயோனில் நிற்க தேவ மகிமை ஜொலிக்கும் நகரே ஜோதி பிதா உயர் தாபரமே 1. மீட்கப்பட்டார் சீயோனில் இயேசுவுடன் மாட்சியுற்றே வருவார் ஆட்டுக்குட்டி அவர் சொந்தமாக யிவர் ஆனதாலே என்றும் இணைந்து நிற்கிறார் - அன்ப 2. பூவின் முதற்பலனால் சீயோனுக்காய் மீட்கப்பட்ட கூட்டத்தாரே ஊரில் ஒருவராய் இடத்தில் இருவராய் பாரில் சீயோன்தனில் பிறந்தோர் இவரே - அன்ப 3. வேதம் வரும் சீயோனாய் ஜீவித்தவர் தேவ சிகரமுமாமே ஆய அரண்களாய் துாய துருகமாய் நேய நகரமாய் சிறந்து நிற்பவர் - அன்ப 4. மாறா அபிஷேகத்தால் சீயோனிலே ராஜன் நிற்பதால் சீயோன் அகிலமும் தேவ நதியாக ஜீவன் பெருகுதே யுகா யுகங்களாய் - அன்ப 5. சீயோன் வெளிப்படும் வேளையிது வேலையும் தீர்ந்தாலே தந்தை முகங் கண்டு சிந்தை மகிழ்ந்தோராய் சந்ததமே சேவை செய்தே வீற்றிருப்போம் - அன்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbar Yesuvin Atigal Itho Inba Seeyonil Nirka Thaeva Makimai Jolikkum Nakarae Jothi Pithaa Uyar Thaabaramae 1. Meetkappattaar Seeyonil Yesuvudan Maatsiyurrae Varuvaar Aattukkutti Avar Sondhamaaga Yivar Aanathaalae Enrum Inainthu Nirkiraar - Anba 2. Poovin Mudharpalanaal Seeyonukkaay Meetkappatta Koottatthaarae Ooril Oruvaraay Idatthil Iruvaraay Paaril Seeyonthanil Piranthor Ivarae - Anba 3. Vaedham Varum Seeyonaay Jeevitthavar Thaeva Sigaramumaamae Aaya Arankalaay Thuாya Thurugamaay Naeya Nakaramaay Siranthu Nirpavar - Anba 4. Maaraa Apishaegatthaal Seeyonilae Raajan Nirpathaal Seeyon Akilamum Thaeva Nathiyaaga Jeevan Perukuthae Yukaa Yuganggalaay - Anba 5. Seeyon Velippatum Vaelaiyithu Vaelaiyum Theernthaalae Thanthai Mugang Kantu Sinthai Makizhnthoraay Sandhathamae Saevai Seythae Veerriruppom - Anba