பாடல் #32778
கண்விழிப்போலென்னை
🔤 Kanvizhippolennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்விழிப்போலென்னை கானகப்பாதையில் கண்டீரோ இயேசு பரா இதுகாறும் ஆட்கொண்ட கருணையின் பூமானே துதியேறும் நின் நாமமே 1. நிலையாக நிறுத்தவோ எனையே - பாச வலைவீசி அலைந்தேன் அணைத்தே நினைவிலும் செயலிலும் திருநோக்கம் நிறைவாக்க விலையேறும் மகிமைக்காக அழைத்தவரே! - கண் 2. அளவில்லா அபிஷேகம் தனிலே - உள்ளில் அழியாத சிருஷ்டியாக வளர அளவில்லா அருள் பொங்கும் அலை போல கிருபைகள் அளித்தென்னை யுமக்கென்றே அழைத்தவரே! - கண் 3. பிரித்து என்னை உரியவனாய் உமக்கே - மாறா பரிவோடு பரிசுத்தம் தரவே பரிசுத்தர்க்களித்ததோர் உபதேசம் நிலைநாட்ட புரிய நற்போராட்டம் அழைத்தவரே! - கண் 4. மறைவான திரு மன்னா வருந்தி - நாளும் நிறைவான ஜெயந்தன்னில் வளர்ந்து குறைவில்லா பிழையில்லா கரையில்லா மனையாக பிறை போல உதித்தோங்க அழைத்தவரே! - கண 5. கிறிஸ்தேசு உமைப் போல திகழ - என்றும் மரத்தினால் உனக்கென்றே பிழைக்க சிலுவையின் மகிழ்வாக அதில் மேன்மை மிக கொண்டே சிரசாம் நின் சரீரமாய் அழைத்தவரே! - கண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanvizhippolennai Kaanakappaathaiyil Kanteero Yesu Paraa Ithukaarum Aatkonda Karunaiyin Poomaanae Thuthiyaerum Nin Naamamae 1. Nilaiyaaga Nirutthavo Enaiyae - Paasa Valaiveesi Alainthaen Anaitthae Ninaivilum Seyalilum Thirunokkam Niraivaakka Vilaiyaerum Makimaikkaaga Azhaitthavarae! - Kan 2. Alavillaa Apishaegam Thanilae - Ullil Azhiyaadha Sirushtiyaaga Valara Alavillaa Arul Pongkum Alai Pola Kirupaigal Alitthennai Yumakkenrae Azhaitthavarae! - Kan 3. Piritthu Ennai Uriyavanaay Umakkae - Maaraa Parivotu Parisuttham Tharavae Parisuttharkkalitthathor Ubathaesam Nilainaatta Puriya Narporaattam Azhaitthavarae! - Kan 4. Maraivaana Thiru Mannaa Varunthi - Naalum Niraivaana Jeyandhannil Valarnthu Kuraivillaa Pizhaiyillaa Karaiyillaa Manaiyaaga Pirai Pola Uthitthongga Azhaitthavarae! - Kana 5. Kiristhaesu Umaip Pola Thigazha - Enrum Maratthinaal Unakkenrae Pizhaikka Siluvaiyin Makizhvaaga Athil Maenmai Miga Kontae Sirasaam Nin Sareeramaay Azhaitthavarae! - Kan