பாடல் #32776
என்னேசரேசு பிரான்
🔤 Ennaesaraesu Piraan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னேசரேசு பிரான் தன் துதி சாற்றுவேன் என்னுயிருள்ளளவும் ஆ! ஆ!! இன்பரின் நாமமல்லால் இன்பம் வேறில்லையே இன்னமும் கனிந்துள்ளம் பாடிடுவேன் 1. காலையில் களிப்பும் மாலையில் மகிழ்வும் பாலையில் தெளிந்த ஜீவனின் துறவும் வாழ்வினில் நனைந்திடும் தோழனும் விழைந்து வாழ்வினில் மங்கள கீதமே - என் 2. என் பெலவீனத்தில் தன் பலனளிக்கும் வன் கிருபையின் மா வற்றா சாகரமே வென்றது அன்பென்னை சொந்தமாய் அனைத்தும் என்றுமாய் ஏற்றிட திரு சித்தம் - என் 3. நித்திய ஆவியால் புத்திரனாக்கியே சத்தியமதினால் என்னிடை கட்டியே உத்தம பாதையே ஏகிட ஜெயமாய் தத்தமாய் தம் பெலனளிக்கிறாரே - என் 4. தூயவர் சாயலாய் மாற்றிடும் தூதுகள் தூதரும் வியக்க சீயோனின்றளித்தார் ஆதரையில் எந்தன் பாக்கியம் நினைக்க ஆனந்தத்தால் உள்ளம் துள்ளிடுதே - என் 5. இயேசுவின் வதன சோபையில் வளர்ந்து ஆசையாய் அவரின் சேவையில் நிலைத்தே சீயோனின் பொன்புரம் போலவே ஸ்திரமாய் சீர் பெற தந்திட்டேன் பதந் தனிலே - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaesaraesu Piraan Than Thuthi Saarruvaen Ennuyirullalavum Aa! Aa!! Inbarin Naamamallaal Inbam Vaerillaiyae Innamum Kaninthullam Paatituvaen 1. Kaalaiyil Kalippum Maalaiyil Makizhvum Paalaiyil Thelindha Jeevanin Thuravum Vaazhvinil Nanainthitum Thozhanum Vizhainthu Vaazhvinil Manggala Keedhamae - En 2. En Pelaveenatthil Than Palanalikkum Van Kirupaiyin Maa Varraa Saagaramae Vendrathu Anpennai Sondhamaay Anaitthum Enrumaay Aerrida Thiru Sittham - En 3. Nitthiya Aaviyaal Putthiranaakkiyae Satthiyamathinaal Ennitai Kattiyae Utthama Paathaiyae Aekida Jeyamaay Thatthamaay Tham Pelanalikkiraarae - En 4. Thooyavar Saayalaay Maarritum Thoothugal Thoodharum Viyakka Seeyonindralitthaar Aadharaiyil Endhan Paakkiyam Ninaikka Aanandhatthaal Ullam Thullituthae - En 5. Yesuvin Vathana Sopaiyil Valarnthu Aasaiyaay Avarin Saevaiyil Nilaitthae Seeyonin Ponpuram Polavae Sthiramaay Seer Pera Thanthittaen Pathan Thanilae - En