பாடல் #32773
ஜெய ஜீவியமே
🔤 Jeya Jeeviyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெய ஜீவியமே ஆ ஆ அற்புதமே இயேசுவில் கண்டடைந்தேன் - நானே தந்ததோர் ஜெயமே இந்த கானகமே தம் கிருபை தனமே 1. பாசமுற உம்மில் வென்றோர் உயர்த்தும் மாசறு ஜெயக்கொடியே நேசுறவே கேட்கும் ராஜனின் தொனியும் தேசுற ஏறுதன்னில் - ஜெய 2. மாமிசமேயிதை சேவித்திடவே பார்மிசை கடனாளியோ மா தூய இரத்தத்தால் கொண்டவரவர்க்கே மாத்திரம் சொந்தமே நான் - ஜெய 3. தாழ்த்தியே மேற்கொள்ளும் வல்லமை யனைத்தும் கீழ்ப்படுத்தும் செயலை சாவினை அறவே பரிகரித்து காவினில் தரும் ஜெயமே - ஜெய 4. சாலேமை சூழ்ந்துமே நிற்கும் மலைகள் போலவர் கிருபைகளே சோதனையில் வழுவாதென்னை ஜெயமாய் சேர்க்கும் சிங்காசனமே - ஜெய 5. தாகம் உள்ளோர் நீர் ஜீவ நதியில் ஏகமாய் பருகிடுவீர் ஆகவே தம் ஜெயம் உம் உரிமையதாய் வேகமாய் விரைந்திடுவீர் - ஜெய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeya Jeeviyamae Aa Aa Arpudhamae Yesuvil Kandatainthaen - Naanae Thandhathor Jeyamae Indha Kaanakamae Tham Kirupai Thanamae 1. Paasamura Ummil Venror Uyartthum Maasaru Jeyakkotiyae Naesuravae Kaetkum Raajanin Thoniyum Thaesura Aerudhannil - Jeya 2. Maamisamaeyithai Saevitthidavae Paarmisai Katanaaliyo Maa Thooya Ratthatthaal Kondavaravarkkae Maatthiram Sondhamae Naan - Jeya 3. Thaazhtthiyae Maerkollum Vallamai Yanaitthum Keezhppatutthum Seyalai Saavinai Aravae Parigaritthu Kaavinil Tharum Jeyamae - Jeya 4. Saalaemai Soozhnthumae Nirkum Malaigal Polavar Kirupaigalae Sodhanaiyil Vazhuvaathennai Jeyamaay Saerkkum Singkaasanamae - Jeya 5. Thaagam Ullor Neer Jeeva Nathiyil Aegamaay Parukituveer Aagavae Tham Jeyam Um Urimaiyathaay Vaegamaay Virainthituveer - Jeya