பாடல் #32771
இயேசுவே எனக்கிந்த
🔤 Yesuvae Enakkindha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே எனக்கிந்த இகமதிலே அசைந்திடாதோர் நம்பிக்கையே சார்ந்திடுவேனே மாறா வாக்கினிலே சாற்றுவோன் அவர் புகழை நேசிக்க சிறந்தவரேசு எனக்கே ஆசைக்குகந்தவரே - இன்ப சாரோனின் ரோஜா அவரே 2. மரணமதின் கொடும் கரத்தினின்றே கருணையாலென்னை விடுத்தே அரவணைத்தவர் கரமே எனது சரணம் தரணியிலே - நேசி 3. பெருகுதே எந்தன் அகந்தனில் கிருபை சாகரமெனவே ஏற்றதொரு சமயம் சகாயமளித்திடும் உற்றதோர் கிருபையிதே - நேசி 4. ஜீவனிலும் பெரியவர் கிருபை சீயோனை போல் உயர்ந்தது வே தாழ்மையுள்ளோரை வாழ்விக்கும் கிருபை சூழ்ந்திடும் நிதமென்னையே - நேசி 5. பூரண கிருபை அளித்திடவே ஆரணர் இயேசு தோன்றிடுவான் சாலேமின் மீட்பின் பலனும் பெற்றிடும் நல் காலமும் விரைந்திடுதே - நேசி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae Enakkindha Igamathilae Asainthitaathor Nampikkaiyae Saarnthituvaenae Maaraa Vaakkinilae Saarruvon Avar Pugazhai Naesikka Sirandhavaraesu Enakkae Aasaikkugandhavarae - Inba Saaronin Rojaa Avarae 2. Maranamathin Kotum Karatthininrae Karunaiyaalennai Vitutthae Aravanaitthavar Karamae Enathu Saranam Tharaniyilae - Naesi 3. Perukuthae Endhan Agandhanil Kirupai Saagaramenavae Aertrathoru Samayam Sakaayamalitthitum Urtrathor Kirupaiyithae - Naesi 4. Jeevanilum Periyavar Kirupai Seeyonai Pol Uyarndhathu Vae Thaazhmaiyullorai Vaazhvikkum Kirupai Soozhnthitum Nidhamennaiyae - Naesi 5. Poorana Kirupai Alitthidavae Aaranar Yesu Thonrituvaan Saalaemin Meetpin Palanum Perritum Nal Kaalamum Virainthituthae - Naesi