பாடல் #32766
மா மகா ராஜனின்
🔤 Maa Makaa Raajanin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா மகா ராஜனின் திவ்விய நகரம் மகிழ்வின் பூரணமே சீயோன் புரம் 1. மாந்தரில் முதற்பலனால் பிதாவுக்காய் மாநிலம் வெறுத்தவாராய் - சுதனுக்காய் மாண்மிகு மீட்பு பெற்ற சீயோனிவரே மகாமேரு மீதினில் ஆளுவார் - மா 2. உருக்க இரக்கங்களால் நிறைந்துள்ள சுரமண்டல இசையாய் - கேட்டிடுதே புவியில் இயேசுவின் பாடுகளில் பங்குற்றோர் நவிந்து கவியே பாடுவார் - மா 3, அண்ணகரே அரண்களாக விளங்கிடும் விண்ணவர் சிகரமிதே - மாணொளியாய் உன்னத தேவனே தன்னுயர் அன்பினிலே வன்னடைக்கலமாய் வாழுவார் - மா. 4. தீவினை புரிந்துரைத்த தீயவரே தீவிரம் திரும்புவாரே - நாணிடவே திவ்வியோர் சீயோனில் தீபமாய் யுகாயுகம் திங்களும் நாணவே சோபிப்பார் - மா. 5. கிறிஸ்து என்னும் மூலை கல்லின் மேல் அப்போஸ்தலர் அஸ்திபாரம் அமைந்த - ஆவியினால் பிதாவின் சிந்தையாய் சீயோனின் சிகரமாய் ஜீவிப்பதால் அவர் சேவிப்பார் - மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Makaa Raajanin Thivviya Nakaram Makizhvin Pooranamae Seeyon Puram 1. Maandharil Mudharpalanaal Pithaavukkaay Maanilam Verutthavaaraay - Sudhanukkaay Maanmiku Meetpu Pertra Seeyonivarae Makaamaeru Meethinil Aaluvaar - Maa 2. Urukka Irakkanggalaal Nirainthulla Suramandala Isaiyaay - Kaettituthae Puviyil Yesuvin Paatugalil Pangkurror Navinthu Kaviyae Paatuvaar - Maa 3, Annakarae Arankalaaga Vilangkitum Vinnavar Sigaramithae - Maanoliyaay Unnatha Devanae Thannuyar Anpinilae Vannataikkalamaay Vaazhuvaar - Maa. 4. Theevinai Purinthuraittha Theeyavarae Theeviram Thirumpuvaarae - Naanidavae Thivviyor Seeyonil Theebamaay Yukaayugam Thinggalum Naanavae Sopippaar - Maa. 5. Kiristhu Ennum Moolai Kallin Mael Apposthalar Asthipaaram Amaindha - Aaviyinaal Pithaavin Sinthaiyaay Seeyonin Sigaramaay Jeevippathaal Avar Saevippaar - Maa