பாடல் #32763
எத்தனை நாவினால்
🔤 Etthanai Naavinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எத்தனை நாவினால் கர்த்தரை புகழ்வேனோ சித்தர் சபை நடுவில் இதனை கனிவுடன் காத்தார் கருணையில் தோத்திர பாத்திரனே ஆருயிர் அன்பரென் ஆதரை மீதினிலே கிருபை இரக்கம் நிரை இயேசுவுக்கே மாறாத தரு நிழலே - ஆறு 2. பூதலம் அதிர்ந்து தன்னிடம் ஒழியுமே பூதங்கள் உருகிடும் வாக்குத்தத்தங்கள் எனக்காய் வகுத்தவர் மாறிடும் மானிடனே- ஆறு 3. சேயினைச் சுமந்தே ஆற்றித் தேற்றிடுமெந்த தாயினும் சிறந்தவரே ஆயனின் காயங்களால் வரும் சுகம் நேயோன் உரிமையே - ஆறு 4. நாடியின் துறையே நெடியோன் விருதினை ஓடி முன்னேகிடுவேன் ஈடில்லாதவரடி ஆவியில் தொடர்ந்தே பீடிகை வந்தடைவேன் - ஆறு 5. கிறிஸ்துவின் நிறைவே நற்சுவிசேஷத்தாலே இத்தரையில் அடைய சித்தங் கெண்டடியேனைக் கண்டழைத்தவரே சீர் பெற செய்திடுவார் - ஆறு 6. சீயோனின் மகிமை கண்களில் வீசிடுதே சிந்தனையும் வாஞ்சையதே ஆசையாயடைய தம் சற்குணந்தனையே நேசருக் கொப்புவித்தேன் - ஆறு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Etthanai Naavinaal Karttharai Pugazhvaeno Sitthar Sapai Natuvil Idhanai Kanivudan Kaatthaar Karunaiyil Thotthira Paatthiranae Aaruyir Anbaren Aadharai Meethinilae Kirupai Irakkam Nirai Yesuvukkae Maaraadha Tharu Nizhalae - Aaru 2. Poodhalam Athirnthu Thannidam Ozhiyumae Poodhanggal Urukitum Vaakkutthatthanggal Enakkaay Vakutthavar Maaritum Maanidanae- Aaru 3. Saeyinaich Sumanthae Aarrith Thaerritumendha Thaayinum Sirandhavarae Aayanin Kaayanggalaal Varum Sugam Naeyon Urimaiyae - Aaru 4. Naatiyin Thuraiyae Netiyon Viruthinai Oti Munnaekituvaen Eetillaadhavarati Aaviyil Thodarnthae Peetikai Vandhataivaen - Aaru 5. Kiristhuvin Niraivae Narsuvisaeshatthaalae Ittharaiyil Ataiya Sitthang Kendatiyaenaik Kandazhaitthavarae Seer Pera Seythituvaar - Aaru 6. Seeyonin Makimai Kankalil Veesituthae Sindhanaiyum Vaanjsaiyathae Aasaiyaayataiya Tham Sarkunandhanaiyae Naesaruk Koppuvitthaen - Aaru