பாடல் #32760
தூய பிதாவின் திருமுகம்
🔤 Thooya Pithaavin Thirumugam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய பிதாவின் திருமுகம் தரிசிப்போர் சீயோனில் நிற்கும் ஊழியர் 1. தாயும் தந்தையும் சோதரரனைத்தும் தாபரித்திடும் எத்தலமதும் வெறுத்தும் தம்மையோர் பானபலியாகவே வார்ப்பவர் தரணியில் சேவைதனில் மணிப்போல மாய்பவர் - தூய 2. சிறந்த தூபமென புகைந்து வரைபவர் இகமதில் ஜெபத்தில் போராடி நிற்பவர் உகந்ததோர் சேவையொன்றே அகந்தன்னில் கொண்டவர் தகுமென திருச்சித்தம் செய்யத் தம்மைத் தந்தவர் - தூய 3. கிறிஸ்துவோடிணைந்த ஸ்தானாபதிகள் திருவடிச் சுவட்டில் நடந்தே பின் செல்பவர் பரிசுத்தர்க்கோர் முறை அளித்த விசுவாசத்தை கருத்துடன் காத்திடவே நற்போராட்டம் செய்பவர் - தூய 4, சரீரமும் சபைக்காய் சந்தோஷத்துடன் சரீரத்தில் பாடுகள் நிறைவேற்றும் தூயவர் சிந்தையில் சத்தியராஜ் மெல்கிசேதேக்கைப்போல் சந்ததமே புவிதனில் தந்தையராய் வாழ்ந்தவர் - தூய 5. அவரது அழைப்பை உணர்ந்து நற்சேவையில் எவர் முன் வருவீர் அரும் உயிர் அளிக்க வருவாரே மந்தையின் மேய்ப்பராய் தருவாரத்தினமதில் மகிமை கிரீடம் - தூய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Pithaavin Thirumugam Tharisippor Seeyonil Nirkum Oozhiyar 1. Thaayum Thanthaiyum Sodhararanaitthum Thaabaritthitum Etthalamathum Verutthum Thammaiyor Paanapaliyaagavae Vaarppavar Tharaniyil Saevaidhanil Manippola Maaypavar - Thooya 2. Sirandha Thoobamena Pukainthu Varaibavar Igamathil Jebatthil Poraati Nirpavar Ugandhathor Saevaiyonrae Agandhannil Kondavar Thakumena Thiruchsittham Seyyath Thammaith Thandhavar - Thooya 3. Kiristhuvotinaindha Sthaanaabathigal Thiruvatich Suvattil Natanthae Pin Selpavar Parisuttharkkor Murai Alittha Visuvaasatthai Karutthudan Kaatthidavae Narporaattam Seypavar - Thooya 4, Sareeramum Sapaikkaay Santhoshatthudan Sareeratthil Paatugal Niraivaerrum Thooyavar Sinthaiyil Satthiyaraaj Melkisaethaekkaippol Sandhathamae Puvidhanil Thanthaiyaraay Vaazhndhavar - Thooya 5. Avarathu Azhaippai Unarnthu Narsaevaiyil Evar Mun Varuveer Arum Uyir Alikka Varuvaarae Manthaiyin Maeypparaay Tharuvaaratthinamathil Makimai Kireedam - Thooya