பாடல் #32759
இது மா தயவே நதிப்
🔤 Ithu Maa Thayavae Nathip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது மா தயவே நதிப் போல் எனது இதயந்தனிலே பாய்ந்திடுதே நிதியின் நிறைவென் இயேசு தானே ஆதியும் அந்தமுமே 1. கிறிஸ்துவின் அன்பு எந்நேரமெனையே நெருக்கியே ஏவிடுதே அவனன்றி யாதும் எனக்கொன்றும் இயலா அவரைப் அடிமையே நான் - இது 2. அனைத்தோரை மிகிலும் எனை நேசிப்பாயோ நினைவால் வினையால்” எனக் கேட்கும் இயேசுவின் கனிவான தொனியே தினமென்னை உருக்கிடுதே 3. அழியாத அன்பால் அழைத்தாரே எனை பழுதில்லா துாயவனாய் விழிப்போல என்னையும் விழைந்தார் நிறுத் த வழுவா தம் சந்நிதியில் 4. துயரங்கள் வரும் பெருந்துன்பை மெனினும் உயர்வோ எத்தாழ்வெனினும் கிறிஸ்தேசு அன்பினை விட்டிவை அகிலம் பிரித்தென்னை மாற்றிடுமோ - இது 5. சுமந்தெந்தன் சிலுவைத் தொடரத் தம் அடிகள் உவந்தே என்னையழைத்தார் நயந்தே என் நேசரின் மாறாத தயவால் ஜெயங்கொள்வேன் முற்றிலுமாய் - இது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Maa Thayavae Nathip Pol Enathu Idhayandhanilae Paaynthituthae Nithiyin Niraiven Yesu Thaanae Aathiyum Andhamumae 1. Kiristhuvin Anpu Ennaeramenaiyae Nerukkiyae Aevituthae Avananri Yaathum Enakkonrum Iyalaa Avaraip Atimaiyae Naan - Ithu 2. Anaitthorai Mikilum Enai Naesippaayo Ninaivaal Vinaiyaal” Enak Kaetkum Yesuvin Kanivaana Thoniyae Thinamennai Urukkituthae 3. Azhiyaadha Anpaal Azhaitthaarae Enai Pazhuthillaa Thuாyavanaay Vizhippola Ennaiyum Vizhainthaar Niruth Tha Vazhuvaa Tham Sannithiyil 4. Thuyaranggal Varum Perunthunpai Meninum Uyarvo Etthaazhveninum Kiristhaesu Anpinai Vittivai Akilam Piritthennai Maarritumo - Ithu 5. Sumanthendhan Siluvaith Thodarath Tham Atigal Uvanthae Ennaiyazhaitthaar Nayanthae En Naesarin Maaraadha Thayavaal Jeyangkolvaen Murrilumaay - Ithu