பாடல் #32758
பொங்குதென் உள்ளம்
🔤 Pongkuthen Ullam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொங்குதென் உள்ளம் நிறைந்த - என்னேசுவே பங்க மில்லா உம்மன்பினால் ஆசையுடன் - நேசருமது பாசக் கரத்தில் - பறந்திளைப்பாறுவேன் - பொங் 1. பாடி புகழுதே என் அதரங்களும் நாடி மகிழுதே என் அந்தரங்கம் நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை நாடு தென் ஜீவனும் நீடூழியாய் - பொங் 2. நிந்தையும் துயரும் சந்திக்கும் வேளை அந்தோ சூழ் இருளாம் சாவின் நிழல்தனில் எந்தையே சீயோனின் கதிர்போல் விந்தையாம் அந்தமான் சோகையால் நடத்துவார் - பொங் 3. மீட்சி செய்தவரே வீழ்ச்சியில் நின்றுமே ஆட்சி செய்யவே நான் என்றும் உம்முடனே மாட்சியில் மிகுநின் நேசக் கடாட்சத்தால் காட்சியில் கொண்டீரே தூசியென்னை - பொங் 4. மேவியே முலையில் பொன் வெள்ளி நிகராய் லேவியின் சுதரை சுத்தி செய்பவரே ஏவியே என்னையும் சுத்திசெய் துமைப்போல் சேவிக்க ஆவியே! மாற்றிடுவார் - பொங் 5. நற்கிரியை யெனில் உற்பவம் செய்தீரே தற்பரா! உமது நாள் வரை நடத்தி சொற்படி வழுவா சந்நிதி வரவே முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்! - பொங்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pongkuthen Ullam Niraindha - Ennaesuvae Pangga Millaa Ummanpinaal Aasaiyudan - Naesarumathu Paasak Karatthil - Paranthilaippaaruvaen - Pong 1. Paati Pugazhuthae En Adharanggalum Naati Makizhuthae En Andharanggam Naatorum Alikkum Nin Kirupaigalai Naatu Then Jeevanum Neetoozhiyaay - Pong 2. Ninthaiyum Thuyarum Santhikkum Vaelai Antho Soozh Irulaam Saavin Nizhalthanil Enthaiyae Seeyonin Kathirpol Vinthaiyaam Andhamaan Sokaiyaal Natatthuvaar - Pong 3. Meetsi Seythavarae Veezhchsiyil Ninrumae Aatsi Seyyavae Naan Enrum Ummudanae Maatsiyil Mikunin Naesak Kataatsatthaal Kaatsiyil Konteerae Thoosiyennai - Pong 4. Maeviyae Mulaiyil Pon Velli Nigaraay Laeviyin Sudharai Sutthi Seypavarae Aeviyae Ennaiyum Sutthisey Thumaippol Saevikka Aaviyae! Maarrituvaar - Pong 5. Narkiriyai Yenil Urpavam Seytheerae Tharparaa! Umathu Naal Varai Natatthi Sorpati Vazhuvaa Sannithi Varavae Murrumaay Aerrennai Aantituveer! - Pong