பாடல் #32754
நள்ளிரவில் இயேசு
🔤 Nalliravil Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நள்ளிரவில் இயேசு பெத்லகேம் புரியில் நீசக் கோலமதாய் கன்னியில் பிறந்தார் - நாள் அல்லேலூயா மகிமை தேவாதி தேவ சுதன் இரட்சகர் பிறந்தார் 1. ஏனோ இவர்க்கிந்தத் தாழ்மையை மானிடனாய் வரவே தன்னிகரில்லா ராஜனாய் இந்நிலம் ஒளியாய் வந்தார் - நாள் 2. ஆட்கொள்ளும் மா வினை போக்கிடும் ஆட்டுக்குட்டி இவரே அன்பால் தேடி எப்பாவியும் அணைக்க வந்த கோனோ -நாள் 3. ஆளுகையும் அதிகாரமும் தோளில் உடையவரே சரீரம் சபை சிறந்தோங்க சிரசாய் உருவெடுத்தார் - நாள் 4, மரணத்தின் அதிகாரியை மாய்த்திடும் மாவீரனாய் ஜீவனும் அழியாமை யாவுமே ஈந்திட அவதரித்தார் - நாள் 5. புவி முழங்கத் துதி சாற்றுவோம் நவிந்து அவர் புகழை தாழ்த்தியே அவனடி சேவிப்போம் தாவீதின் சேயனிவர்- நாள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalliravil Yesu Pethlakaem Puriyil Neesak Kolamathaay Kanniyil Piranthaar - Naal Allaelooyaa Makimai Thaevaathi Thaeva Sudhan Iratsakar Piranthaar 1. Aeno Ivarkkindhath Thaazhmaiyai Maanidanaay Varavae Thannigarillaa Raajanaay Innilam Oliyaay Vanthaar - Naal 2. Aatkollum Maa Vinai Pokkitum Aattukkutti Ivarae Anpaal Thaeti Eppaaviyum Anaikka Vandha Kono -naal 3. Aalukaiyum Athikaaramum Tholil Utaiyavarae Sareeram Sapai Siranthongga Sirasaay Uruvetutthaar - Naal 4, Maranatthin Athikaariyai Maaytthitum Maaveeranaay Jeevanum Azhiyaamai Yaavumae Eenthida Avatharitthaar - Naal 5. Puvi Muzhanggath Thuthi Saarruvom Navinthu Avar Pugazhai Thaazhtthiyae Avanati Saevippom Thaaveethin Saeyanivar- Naal