பாடல் #32753
என் பெலனும் எந்தன்
🔤 En Pelanum Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலனும் எந்தன் ஜீவன் இயேசுவே பொன்நாமம் போற்றிடுவேன் இந்நிலம் உம்மையல்லாமல் நல் மேய்ப்பர் யாருமில்லை தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே 1. சந்தோஷமதினால் நிறைந்தென்னுள்ளமே சந்ததம் பாடிடுவேன் கிருபையதை உயர் பர்வதங்கள் சூழும் சாலேமைப்போல் உம் கிருபை என்னை சூழ்ந்திடுதே - என் 2. அநாதி தேவனே உம் சிறகதின் கீழ் வந்தடைந்தோர்க்கு நீர் ஜீவ ஊற்றல்லவோ ஆண் செல்வமும் நீர் ஞான வைத்தியனும் நீர் வான மன்னாவும் நீர் என் நேசரே - என் 3. பரிசுத்த உழைப்பால் எனையும் பரனே திருசித்தம் செய்யவே தெரிந்தெடுத்தீர் வானவர் தூதுரும் சேர்ந்து கண்ணோக்கிடும் உன்னத சேவையும் அளித்தீரே - என் 4. வரைந்தீர் எனக்காய் உம் திரு சிந்தையில் மறைந்திருந்த மா நித்திய நோக்கமே மாறா அப்போஸ்தலர் நல் உபதேசத்தால் பாரில் விளங்கிட முன்குறித்தார் - என் 5. சீயோனில் சபையின் மூலைக்கல்லாகவே தீயோனை வென்றுயர்ந்தீர் பாரம் வரையும் எப்போ நீர் வருவீர் என்றேங்கும் சபையை தப்பாமல் சேர்க்கவே தோன்றிடுவீர் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelanum Endhan Jeevan Yesuvae Ponnaamam Porrituvaen Innilam Ummaiyallaamal Nal Maeyppar Yaarumillai Than Jeevan Enakkaagath Thandhavarae 1. Santhoshamathinaal Nirainthennullamae Sandhatham Paatituvaen Kirupaiyathai Uyar Parvathanggal Soozhum Saalaemaippol Um Kirupai Ennai Soozhnthituthae - En 2. Anaathi Devanae Um Sirakathin Keezh Vandhatainthorkku Neer Jeeva Oortrallavo Aan Selvamum Neer Njaana Vaitthiyanum Neer Vaana Mannaavum Neer En Naesarae - En 3. Parisuttha Uzhaippaal Enaiyum Paranae Thirusittham Seyyavae Therinthetuttheer Vaanavar Thoothurum Saernthu Kannokkitum Unnatha Saevaiyum Alittheerae - En 4. Varaintheer Enakkaay Um Thiru Sinthaiyil Marainthirundha Maa Nitthiya Nokkamae Maaraa Apposthalar Nal Ubathaesatthaal Paaril Vilangkida Munkuritthaar - En 5. Seeyonil Sapaiyin Moolaikkallaagavae Theeyonai Venruyarntheer Paaram Varaiyum Eppo Neer Varuveer Enraengkum Sapaiyai Thappaamal Saerkkavae Thonrituveer - En