பாடல் #32751
ஆனந்தமாகவே சீயோனின்
🔤 Aanandhamaagavae Seeyonin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆனந்தமாகவே சீயோனின் மீதிலே ஆட்டுக்குட்டியுடன் நின்றிடுவோர் அன்பினில் தூயரே குற்றமில்லாதோர் அனுதினம் இணைந்தொன்றாய் ஜொலித்திடுவார் சீயோனின் கானமே புதியதோர் கீதம் ஜெயங் கொண்டோர் ஜீவியமும் இதுவாகும் 2. ஊரினின் றேகனாய் இனத்திலிருவராய் தெரிந்தபி ஷேகத்தால் அழைக்கப்பட்டோர் பரிமிகு சீயோனின் ஒளியாய் விளங்கவே திருவடிதனைத் தொடர்ந்தேகியவர் 3. ஆட்சியர் இயேசு போல் ஆசாரியர்கள் இலட்சத்து நாற்பத்தி நாலாயிர சாட்சியாய் பெற்றதும் சர்வ கிருபையின் மாட்சியுறு சிகரம் தாடி செய்வார் 4. உத்தம ஸ்தானமும் நித்திய கீர்த்தியும் சுத்தராம் சீயோனின் புத்திரர்க்கே தத்தமாய் சேவையில் ஊற்றியே ஜீவனை சத்தியமதின் மதிலாய் நின்றவரே 5. விந்தையாம் சீயோனின் நற்செய்தி கூறுவோர் சுந்தர பாதங்கள் நிற்குமதில் பார் எந்தன் தேவன் ராஜாதி ராஜனே பரிபாலனம் செய்கிறார் எனக் கேட்குதே 6. சீயோனின் ராஜனாய் ஏற்றபிஷேகமே சீர்மிகு மைந்தனே வீற்றிருப்பார் செங்கோலும் ஓங்குமே நீதியாய் எங்குமே நீங்கிடாததினின்று எந்நாளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aanandhamaagavae Seeyonin Meethilae Aattukkuttiyudan Ninrituvor Anpinil Thooyarae Kurtramillaathor Anuthinam Inainthonraay Jolitthituvaar Seeyonin Kaanamae Puthiyathor Keedham Jeyang Kontor Jeeviyamum Ithuvaakum 2. Oorinin Raeganaay Inatthiliruvaraay Therindhapi Shaegatthaal Azhaikkappattor Parimiku Seeyonin Oliyaay Vilanggavae Thiruvatidhanaith Thodarnthaekiyavar 3. Aatsiyar Yesu Pol Aasaariyarkal Ilatsatthu Naarpatthi Naalaayira Saatsiyaay Pertrathum Sarva Kirupaiyin Maatsiyuru Sigaram Thaati Seyvaar 4. Utthama Sthaanamum Nitthiya Keertthiyum Suttharaam Seeyonin Putthirarkkae Thatthamaay Saevaiyil Oorriyae Jeevanai Satthiyamathin Mathilaay Nindravarae 5. Vinthaiyaam Seeyonin Narseythi Kooruvor Sundhara Paadhanggal Nirkumathil Paar Endhan Devan Raajaathi Raajanae Paripaalanam Seykiraar Enak Kaetkuthae 6. Seeyonin Raajanaay Aertrapishaegamae Seermiku Maindhanae Veerriruppaar Sengkolum Ongkumae Neethiyaay Engkumae Neengkitaadhathininru Ennaalumae