பாடல் #32749
ஆவியின் பெருமழை
🔤 Aaviyin Perumazhai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆவியின் பெருமழை பொழிந்திடுமே தூய ஆவியே அழிவில்லா தேசிகரே அளவில்லா உமது ஜீவனை எமக்கு அளித்திட வருவீர் எமதரசே அபிஷேகித்திடுவீரே - அபிஷேகித்திடுவீரே அடிமையின் நுகம் முற்றும் முறிந்திடவே - தேவா 2. அக்கினி நாவுகள் போல் வந்தீரே - அன்று அமர்ந்திட காத்துமே நின்றவர் மேல் அனலிடை அருளே வடிவுடை யொளியாய் அடியவர் மீதில் வந்தமர்ந்திடுவீர் - அபி 3. ஆலயமாகவே எம் காயமெல்லாம் - இதோ ஆதீனமாயுமக்கே அளித்துவிட்டோம் அனுதினம் நிறைவாய் நவபெலமளித்தே அபிஷேகித் துயிர்ப்பீர் அதிபரே நீர்- அபி 4. செய்குவீர் அற்புதங்கள் அடையாளங்கள் - இன்றே நல்குவீர் தரித்திட வரங்களெல்லாம் புல்லரும் வரவே உபதேச ஒளியில் வல்லமை தருவீர் எளியவர்க்கே - அபி 5. ஏகமாய் இணைந்தபி ஷேகத்தினால் - ஒரே தேகம் முதற்பலன் சபையதுவை ஏகமாய்க் கூட்டிட பூவின் நற்பலனாய் வேகம் மணாளனே வருவதால் - அபி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aaviyin Perumazhai Pozhinthitumae Thooya Aaviyae Azhivillaa Thaesigarae Alavillaa Umathu Jeevanai Emakku Alitthida Varuveer Ematharasae Apishaekitthituveerae - Apishaekitthituveerae Atimaiyin Nugam Murrum Murinthidavae - Thaevaa 2. Akkini Naavugal Pol Vantheerae - Anru Amarnthida Kaatthumae Nindravar Mael Analitai Arulae Vativutai Yoliyaay Atiyavar Meethil Vandhamarnthituveer - Api 3. Aalayamaagavae Em Kaayamellaam - Itho Aatheenamaayumakkae Alitthuvittom Anuthinam Niraivaay Navapelamalitthae Apishaekith Thuyirppeer Athibarae Neer- Api 4. Seykuveer Arpudhanggal Ataiyaalanggal - Inrae Nalkuveer Tharitthida Varanggalellaam Pullarum Varavae Ubathaesa Oliyil Vallamai Tharuveer Eliyavarkkae - Api 5. Aegamaay Inaindhapi Shaegatthinaal - Orae Thaegam Mudharpalan Sapaiyathuvai Aegamaayk Koottida Poovin Narpalanaay Vaegam Manaalanae Varuvathaal - Api