பாடல் #32741
ஜெயமே ஜெயமே ஜெயம்
🔤 Jeyamae Jeyamae Jeyam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயமே ஜெயமே ஜெயம் அல்லேலூயா கிறிஸ்து எழுந்தார் உயிர்த்தெழுந்தார் சாவை வென்று எழுந்தார் 1. மரணத்தின் கூர் அடித்தே பாதாளத்தின் சிறை அழித்தே அழிவில்லா தேவ குமாரன் உயிர்த்தெ எழுந்தனர் ஆர்ப்பரிப்போம் - ஜெய 2. மரணம் இல்லை யவர்க்கே பரிகரித்தனர் சாவினையே மரண பயமென்பதில்லையே இனியும் பரண் உயிர்த்தெழுந்ததில் - ஜெய 3. மகிமையின் ஆவியினால் கிறிஸ்தேசு உயிர்த்ததினால் தாழ்ச்சையுறும் என் சரீரத்தினை விண் மாட்சியாய் மாற்றிடுவார் - ஜெய 4. நித்திய நம்பிக்கையால் திரையேகிடச் செய்திடுவார் ஆத்தும் நங்கூரமே எந்தன் வாழ்வில் ஜெயித்தோர் சிங்காசனமே - ஜெய 5. மகிமையுறும் சபையாய் மகிழ்ந்தே தம்முன் நிறுத்திடவே மணவாளன் இயேசுவே தோன்றுகையில் மறைந்தேகுவார் அவர் சுத்தரே - ஜெய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyamae Jeyamae Jeyam Allaelooyaa Kiristhu Ezhunthaar Uyirtthezhunthaar Saavai Venru Ezhunthaar 1. Maranatthin Koor Atitthae Paathaalatthin Sirai Azhitthae Azhivillaa Thaeva Kumaaran Uyirtthe Ezhundhanar Aarpparippom - Jeya 2. Maranam Illai Yavarkkae Parigaritthanar Saavinaiyae Marana Payamenbathillaiyae Iniyum Paran Uyirtthezhundhathil - Jeya 3. Makimaiyin Aaviyinaal Kiristhaesu Uyirtthathinaal Thaazhchsaiyurum En Sareeratthinai Vin Maatsiyaay Maarrituvaar - Jeya 4. Nitthiya Nampikkaiyaal Thiraiyaekidach Seythituvaar Aatthum Nangkooramae Endhan Vaazhvil Jeyitthor Singkaasanamae - Jeya 5. Makimaiyurum Sapaiyaay Makizhnthae Thammun Nirutthidavae Manavaalan Yesuvae Thonrukaiyil Marainthaekuvaar Avar Suttharae - Jeya