பாடல் #32739
நமக்கொரு பாலகன்
🔤 Namakkoru Paalakan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார் அதிசயம் அவரது நாமம் மாமிசத்தில் வந்தவரே 1. இறைமனு வேலனாய் கிருபையும் சத்தியம் நிறைந்தவராய் நம்மோடிணைந்தவரே சிறை கிடப்போரை விரைந்து இரட்சிக்கவே நிறையன்பு கொண்டு நினைந்தவரே - நமக்கொரு 2. இளங்கிளை போலவே தழற்நிலந்தனினின்று துளிர்விடும் வேரென வெளிப்படவே ஒளிர்வுடை வேதனின் அருள் மொழியவரே எளியவர் கோலமதேற்றவரே - நமக்கொரு 3. ஆகாயப் பறவையும் அடையுமோர் கூடுண்டு அலைந்திடும் நரிக்குமோர் குழியுமுண்டே அனைத்தையும் வார்த்தையால் வகுத்த விண் சுதனே அவனியில் சாப்பிட மற்றவரே - நமக்கொரு 4. நீதியிலும் சமாதானத்திலும் உயர் இராஐனாய் ஆளுகை செய்திடுவோர் மெல்கிசேதேக்கின் முறை வழி வருவோர் மூலைக்கல்லென்றுமே சபையதற்கே - நமக்கொரு 5. மகிமையும் கீர்த்தியும் புகழ்ச்சியும் துதி மிகு ஆதிபரன் இயேசுவின் நாமத்திற்கே முடிவிடம் வரையும் இடரற நடத்தும் திருவடிதனில் எமைப் படைத்திடுவோம் - நமக்கொரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkoru Paalakan Piranthaar Namakkor Kumaaran Kotukkappattaar Athisayam Avarathu Naamam Maamisatthil Vandhavarae 1. Iraimanu Vaelanaay Kirupaiyum Satthiyam Niraindhavaraay Nammotinaindhavarae Sirai Kidapporai Virainthu Iratsikkavae Niraiyanpu Kontu Ninaindhavarae - Namakkoru 2. Ilangkilai Polavae Thazharnilandhanininru Thulirvitum Vaerena Velippatavae Olirvutai Vaedhanin Arul Mozhiyavarae Eliyavar Kolamathaertravarae - Namakkoru 3. Aakaayap Paravaiyum Ataiyumor Kootuntu Alainthitum Narikkumor Kuzhiyumuntae Anaitthaiyum Vaartthaiyaal Vakuttha Vin Sudhanae Avaniyil Saappida Martravarae - Namakkoru 4. Neethiyilum Samaathaanatthilum Uyar Iraaainaay Aalukai Seythituvor Melkisaethaekkin Murai Vazhi Varuvor Moolaikkallenrumae Sapaiyatharkae - Namakkoru 5. Makimaiyum Keertthiyum Pugazhchsiyum Thuthi Miku Aathibaran Yesuvin Naamatthirkae Mutividam Varaiyum Idarara Natatthum Thiruvatidhanil Emaip Pataitthituvom - Namakkoru