பாடல் #32738
கர்த்தரை நான் எக்காலமும்
🔤 Karttharai Naan Ekkaalamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்திரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் 1. கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும் கழித்து மேன்மை பாராட்டுவது ஒருமித்து நாம் உயர்ந்திடுவோம் கருத்தாய் அவர் நாமமே - கர்த்த 2. தூய பரண் முகம் நோக்கிடுவோர் சூரிய சோபையாய் மாற்றிடுவார் ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே சுகிக்க நல்லவரே - கர்த்த 3. ஜீவனை யீந்தார் தம் சாவினாலே வேதனை நீக்கினார் நோவினாலே அற்புதமாய் எந்தன் ஜீவியமதையே தற்பரன் மாற்றுகிறார் - கர்த்த 4. தேறி அப்போஸ்தல தூதுகளால் மாற்றிடுவார் அவர் ரூபாய் ஊற்றியவர் புது ஜீவன் எந்நாளும் ஏற்றுவார் ஜெயக் கொடியே - கர்த்த 5. அக்கினியின் ஊடே நடந்திடும் விக்கினமின்றி நான் துலங்க ஆக்குவார் பொன்னினும் என் விசுவாசம் மிக்கதோர் மகிமையதாய் - கர்த்த 6. சீயோனே உன் பெலன் தரித்திடுவாய் வீற்றிடுவாய் எழுந்து எருசலேமே உன் துயர் நீக்கிடும் இன்ப மணாளன் வந்திடும் வேளையிதே - கர்த்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalamum Sthotthirippaen Avar Thuthi Eppothum En Vaayilirukkum 1. Karttharukkul Endhan Aatthumaavum Kazhitthu Maenmai Paaraattuvathu Orumitthu Naam Uyarnthituvom Karutthaay Avar Naamamae - Karttha 2. Thooya Paran Mugam Nokkituvor Sooriya Sopaiyaay Maarrituvaar Rusikka Inbamae Yesuvin Anpae Sukikka Nallavarae - Karttha 3. Jeevanai Yeenthaar Tham Saavinaalae Vaedhanai Neekkinaar Novinaalae Arpudhamaay Endhan Jeeviyamathaiyae Tharparan Maarrukiraar - Karttha 4. Thaeri Apposthala Thoothugalaal Maarrituvaar Avar Roopaay Oorriyavar Puthu Jeevan Ennaalum Aerruvaar Jeyak Kotiyae - Karttha 5. Akkiniyin Ootae Natanthitum Vikkinaminri Naan Thulangga Aakkuvaar Ponninum En Visuvaasam Mikkathor Makimaiyathaay - Karttha 6. Seeyonae Un Pelan Tharitthituvaay Veerrituvaay Ezhunthu Erusalaemae Un Thuyar Neekkitum Inba Manaalan Vanthitum Vaelaiyithae - Karttha