பாடல் #32736
தேடி வந்தார் தேடி
🔤 Thaeti Vanthaar Thaeti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடி வந்தார் தேடி வந்தார் தேடி வந்தாரே தேவ சேனா அன்பின் ரூபமாய் - இயேசு தேடி வந்தாரே 1. காரிருள் சூழ்ந்த பாவ உலகின் வாரிதியில் அழியா தாரகையாக நின்று நேர் வழி காட்டிடும் மா வரும் இரட்சகராய் - தேடி 2. தேடுவாரின்றியே ஓடி அலை கையில் மேடுகள் மீதினிலே கூட்டி நல் மேய்ப்பராய் மந்தையில் சேர்த்து ஈ டேற்றிட நினைந்தவராய் - தேடி 3. பாரஞ் சுமந்த உள்ளம் நொந்தோரை புரிந்து ஏற்றிடவும் பொங்கிடும் வினை நீங்கிவிடும் தேவ ஆக்கினை ஏற்றவராய் - தேடி 4. ஆழி போல் ஆழ்ந்த அவர் தனத்தால் தாழ்ந்தவர் வாழ்விக்க வே ஏழ்மையின் கோலமே பூண்டவராயிந்த பாழுலகந்தனிலே - தேடி 5. ஜீவனுள்ள மா நம்பிக்கை யீயும் சீயோனின் தூதுகளால் நித்தியரான பிதாவின் நற்சாயலில் நித்தம் வளர்ந்திடவே - தேடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeti Vanthaar Thaeti Vanthaar Thaeti Vanthaarae Thaeva Saenaa Anpin Roobamaay - Yesu Thaeti Vanthaarae 1. Kaarirul Soozhndha Paava Ulakin Vaarithiyil Azhiyaa Thaarakaiyaaga Ninru Naer Vazhi Kaattitum Maa Varum Iratsakaraay - Thaeti 2. Thaetuvaarinriyae Oti Alai Kaiyil Maetugal Meethinilae Kootti Nal Maeypparaay Manthaiyil Saertthu Ee Taerrida Ninaindhavaraay - Thaeti 3. Paaranj Sumandha Ullam Nonthorai Purinthu Aerridavum Pongkitum Vinai Neengkivitum Thaeva Aakkinai Aertravaraay - Thaeti 4. Aazhi Pol Aazhndha Avar Thanatthaal Thaazhndhavar Vaazhvikka Vae Aezhmaiyin Kolamae Poondavaraayindha Paazhulakandhanilae - Thaeti 5. Jeevanulla Maa Nampikkai Yeeyum Seeyonin Thoothugalaal Nitthiyaraana Pithaavin Narsaayalil Nittham Valarnthidavae - Thaeti