பாடல் #32732
இயேசு இரட்சகர்
🔤 Yesu Iratsakar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இரட்சகர் ஏழையாக இத்தரை மீதில் வந்துதித்தார் 1. வான் வெளி தனில் வின் தூதர்கள் கூடியே இன்னிசை முழக்க முன்னணையில் இன்னல்கள் நீக்கும் மாந்தர்க்கு ஒளியாய் அன்பர் அவதரித்தார் - பூவில் - இயேசு 2. பார் தலம் வரவே பரன் துறந்தனரே பாவ நிவாரண பலி யாவரே பாசம் வைத்ததினால் எளியோர் தாழ்மையை பரிவாய் கண்ணோக்கிடவோ - மிக - இயேசு 3. பெத்தலை பதியாம் தேவ குமாரன் மெல்கிசேதேக்கின் முறைமையில் நினைத்திடும் நித்திய ஆசாரியரிவர் தொல்லுலகில் உதித்தார் - இந்த - இயேசு 4. தேவனின் மகிமை சாயலை யிழந்தே ஜீவனற்றவராய் மாள்கையிலே நாடியே மேவி ஜீவனையளித்த நல்ல சமாரியனே - ஏற்ற - இயேசு 5. இம்மானுவேலன் உன்னத மைந்தன் இன்றுமென்றும் நம் மோடிருப்பார் பணிவுடன் தேவ சித்தம் செய்ய படைத்திடுவோம் அவர்க்கே முற்றும் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Iratsakar Aezhaiyaaga Ittharai Meethil Vanthuthitthaar 1. Vaan Veli Thanil Vin Thoodharkal Kootiyae Innisai Muzhakka Munnanaiyil Innalkal Neekkum Maandharkku Oliyaay Anbar Avatharitthaar - Poovil - Yesu 2. Paar Thalam Varavae Paran Thurandhanarae Paava Nivaarana Pali Yaavarae Paasam Vaitthathinaal Eliyor Thaazhmaiyai Parivaay Kannokkidavo - Miga - Yesu 3. Petthalai Pathiyaam Thaeva Kumaaran Melkisaethaekkin Muraimaiyil Ninaitthitum Nitthiya Aasaariyarivar Thollulakil Uthitthaar - Indha - Yesu 4. Devanin Makimai Saayalai Yizhanthae Jeevanartravaraay Maalkaiyilae Naatiyae Maevi Jeevanaiyalittha Nalla Samaariyanae - Aertra - Yesu 5. Immaanuvaelan Unnatha Maindhan Inrumenrum Nam Motiruppaar Panivudan Thaeva Sittham Seyya Pataitthituvom Avarkkae Murrum - Yesu