பாடல் #32729
தேவ மைந்தன் இயேசு
🎙 கிறிஸ்தவ பாடல்
1. தேவ மைந்தன் இயேசு கிறிஸ்து துதிக்குப் பாத்திரரே தோன்றினார் தாழ்மையின் உருவாய் துாயராம் தீர்க்கர் உரைப்படியே ஆனந்தமாய் நம் ஆர்ப்பரிப்போமே அல்லேலூயா மகிமை அற்புதர் இயேசுவுக்கே 2. ஞானம் நீதி பரிசுத்தம் மட்டும் ஆன திரு சுதனே வானவரின் சாயல் நாம் அணிய மானிட ரூபம் தரித்தவரே - ஆன 3. பாவம் போக்கும் பலியாக தமையே பாரினில் ஈந்தனரே மாநிலத்தோர் வானிலத்தோர் மகிழ்வுடன் வணங்கிடும் நாமமுள்ளோர் - ஆன் 4. பேய் சக்தி மாத்திட தேவை சேய் மரித்தாரே தியாகத்தின் மா மேன்மையின் உயர்வை நாயகன் நானிலம் அறியச் செய்தார் - ஆன 5. அல்லேலூயா மகிமையும் கனமும் ஆளுகையும் இவர்க்கே ஆசையுடன் பணிந்திடுவோம் அதிசயமாய் நம்மை மீட்டவரே - ஆன