பாடல் #32727
தேவசுதனிவரே குடில்
🔤 Thaevasudhanivarae Kutil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவசுதனிவரே குடில் தன்னை தேடி வந்தாரே 1. ஆதியிலே நித்ய பிதாவின் இருந்த அழிவில்லாத மெய் தேவ சுதன் அன்னையின் மேலாய் அன்பு கொண்டதினால் அவதரித்தார் ஏழை கோலமதாய் - தேவ 2. கிருபை சத்தியம் நிறைந் துதித்தனரே உருவாய் இயேசென்னும் நாமத்தில் பரனின் பூரண கிருபை தான் இவர் கிருபையின் மேல் கிருபை நம் பெறவே - தேவ 3. கந்தை பொதிந்திவர் புல்லணை மீதிலே சுந்தர பாலனாய் துாங்குகிறார் சொந்தமே நமக்கிந்த தாழ்மையின் ராஜன் வந்தனர் எம்மையும் வாழ்விக்கவே - தேவ 4. மரணத்தின் அதிகாரி பிசாசை மரணத்தினால் அவர் அழித்திடவே இருளை போக்கிட இவர் உதித்தாரே அருணோதயமாய் அவனியிலே - தேவ 5. சர்வ சிருஷ்டியின் காரணரிவரே சாவினை ஜெயித்துயர் முதற்பலனால் சரீரம் சபையின் அரும் சிரசாய் தந்திட வந்தாரே தாரணியில் - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevasudhanivarae Kutil Thannai Thaeti Vanthaarae 1. Aathiyilae Nithya Pithaavin Irundha Azhivillaadha Mey Thaeva Sudhan Annaiyin Maelaay Anpu Kondathinaal Avatharitthaar Aezhai Kolamathaay - Thaeva 2. Kirupai Satthiyam Nirain Thuthitthanarae Uruvaay Yesennum Naamatthil Paranin Poorana Kirupai Thaan Ivar Kirupaiyin Mael Kirupai Nam Peravae - Thaeva 3. Kanthai Pothinthivar Pullanai Meethilae Sundhara Paalanaay Thuாngkukiraar Sondhamae Namakkindha Thaazhmaiyin Raajan Vandhanar Emmaiyum Vaazhvikkavae - Thaeva 4. Maranatthin Athikaari Pisaasai Maranatthinaal Avar Azhitthidavae Irulai Pokkida Ivar Uthitthaarae Arunodhayamaay Avaniyilae - Thaeva 5. Sarva Sirushtiyin Kaaranarivarae Saavinai Jeyitthuyar Mudharpalanaal Sareeram Sapaiyin Arum Sirasaay Thanthida Vanthaarae Thaaraniyil - Thaeva