பாடல் #32726
இன்ப இயேசுவின்
🔤 Inba Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப இயேசுவின் இணையில்லா நாமத்தை புகழ்ந்து, இகமதில் பாடிட தருணமிதே இயேசுவைப் போல் நல் நேசரில்லை இன்றும் என்றென்றும் அவர் துதி சாப்பிடுவேன் நித்தியமான பர்வதமே உந்தன் நிலைத்திருப்பேன் நீங்கிடாதென்னை தோளில் மேல் சுமந்தே நித்தம் நடத்துகிறீர் என்னையும் உம் ஜனம் நினைந்து - ஈந்தீர் உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய். - இன்ப பாவத்தில் வீழ்ந்து மாயையிலே ஆழ்ந்து நான்மாள்கையிலே பரிந்து தேவ அன்பினைக் காட்டியே பட்சமாய் பார்த்தெடுத்தீர் பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக பரலோக நன்மைகளால் நிறைத்தீர். - இன்ப மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுமாப்போல் என் ஆத்துமா உம் பொன் முகம் காணவே வாஞ்சித்துக் காத்திடுதே வானிலும் இந்தப் பூவிலும் நீர் - என் வாஞ்சைகள் தீர்ப்பவர் நினைந்து. - இன்பம் சீயோனிலே நீர் சிந்தை வைத்தீர் சேர்த்தொன்றாய் கட்டுதற்காய் திவ்வியபிஷேகம் தந்தெமை நிறுத்தி சேர்த்தீரே சுத்தருடன் சேதம் வராமலே கரத்தினால் - உம்மை சேவிப்போம் நித்திய நித்தியமாய் - இன்ப ஆர்ப்பரிப்போம் ஸ்தோத்தரிப்போம் அன்பரை உளம் கனிந்த அளவில்லாத ஜீவனை அளித்தே அற்புத ஜெயம் ஈந்தீரே அல்லேலூயா துதி கனம் மகிமை - உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம் - இன்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Yesuvin Inaiyillaa Naamatthai Pugazhnthu, Igamathil Paatida Tharunamithae Yesuvaip Pol Nal Naesarillai Inrum Enrenrum Avar Thuthi Saappituvaen Nitthiyamaana Parvathamae Undhan Nilaitthiruppaen Neengkitaathennai Tholil Mael Sumanthae Nittham Natatthukireer Ennaiyum Um Janam Ninainthu - Eentheer Unnatha Velippatutthal Niraivaay. - Inba Paavatthil Veezhnthu Maayaiyilae Aazhnthu Naanmaalkaiyilae Parinthu Thaeva Anpinaik Kaattiyae Patsamaay Paartthetuttheer Paaril Parisuttharaakudharkaay - Miga Paraloga Nanmaigalaal Niraittheer. - Inba Maanaanathu Neerotaigalai Vaanjsitthuk Katharumaappol En Aatthumaa Um Pon Mugam Kaanavae Vaanjsitthuk Kaatthituthae Vaanilum Indhap Poovilum Neer - En Vaanjsaigal Theerppavar Ninainthu. - Inbam Seeyonilae Neer Sinthai Vaittheer Saertthonraay Kattudharkaay Thivviyapishaegam Thanthemai Nirutthi Saerttheerae Suttharudan Saedham Varaamalae Karatthinaal - Ummai Saevippom Nitthiya Nitthiyamaay - Inba Aarpparippom Sthottharippom Anbarai Ulam Kanindha Alavillaadha Jeevanai Alitthae Arpudha Jeyam Eentheerae Allaelooyaa Thuthi Kanam Makimai - Um Naamatthirkae Nidham Saarrituvom - Inbam